Dec 17, 2017

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவர்கள் மீளவும் தாக்கல் செய்ய முடியாது - மஹிந்த



வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவர்கள் மீளவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட கட்சிகளுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ மீளவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படாது என அவர் கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மஹரகம, பதுளை, அகலவத்தை, பாணந்துறை, வெலிகம, மஹியங்கனை போன்ற உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுக்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் பதியதலாவ, தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் உள்ளிட்ட 22 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
எனினும், இவ்வாறு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட எந்தவொரு வேட்பாளரும் மீளவும் வேட்பு மனுத்தாக்கல் செய்து விண்ணப்பிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றில் மென்டோமுஸ் கட்டளையொன்றை தாக்கல் செய்து மீளவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post