இந்திய அரசியல் வாதிகளை வெட்கம் அடைய செய்த இலங்கை கிரிக்கட் வீரர்களின் மாஸ்க்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இலங்கை வீரர்கள் ‘மாஸ்க்’ அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறிஉள்ளார்.

மேற்கு வங்காளம் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “வெளிநாட்டில் இருந்து வந்து சர்வதேச போட்டியை விளையாடும் வீரர்கள் மாஸ்க் அணிவது சரியானது கிடையாது. காற்று மாசுபாடு ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறது. இது நாட்டிற்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்காது. மாசுபாட்டை டெல்லி கட்டுப்படுத்த வேண்டும் என்ற நான் நினைக்கிறேன். 

டெல்லி அரசு அமர்ந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.” என கூறிஉள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதாக வெட்கமாக நான் உணர்கிறேன், இல்லையெனில் இதனை நான் சொல்லியிருக்க மாட்டேன். இது அரசியல் பிரச்சனை கிடையாது, உண்மையான பிரச்சனை எனவும் குறிப்பிட்டு உள்ளார்.