இலங்கையர்களை சந்திக்க மறுத்த மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிஇலங்கையில் வசிக்கும் மாலைத்தீவைச் சேர்ந்தவர்களுடனான சந்திப்பை, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாலைத்தீவின் ஊடகமான ராஜே இதனைத் தெரிவித்துள்ளது.

நாளையதினம் இந்த சந்திப்பு நடைபெறவிருந்தது. ஆனால் தனிப்பட்டக் காரணங்களால் அவர் இந்த சந்திப்பை இரத்து செய்திருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மாலைத்தீவில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கான தீர்வை காணும் பொருட்டு, அந்த நாட்டின் சகல கட்சிகளும் இணைந்த குழு ஒன்று இலங்கையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த வருட முற்பகுதியில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...