சவுதிஅரேபியாவில் ஆப்பிள்-அமேசான் நிறுவனங்கள் முதலீடுஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் சர்வதேச நாடுகளில் முதலீடு செய்து தனது வர்த்தகத்தை பெருக்கி வருகின்றன. அரேபியா நாடுகளில் ஒன்றான சவுதிஅரேபியாவில் நேரடியாக வர்த்தக முதலீடு செய்யாமல் 3-வது நிறுவனம் மூலம் தனது தயாரிப்புகளை சவுதி அரேபியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், தங்களது தயாரிப்புகளை சவுதி அரேபியாவில் நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக சவுதி அரேபியாவில் வர்த்தக முதலீடு செய்கிறது.
அதற்கான லைசென்சு பெறுவது குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவு வர்த்தக முதலீடு குழுமம் ‘சாகியா’வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை வருகிற பிப்ரவரியில் ‘சாகியா’ அமைப்புடன் முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2019-ம் ஆண்டில் சில்லரை விற்பனை நிலையங்கள் தொடங்கப்படுகிறது.
‘அமேசான்’ நிறுவனத்தின் பேச்சு வார்த்தை தொடக்க நிலையில் உள்ளது. எனவே ஒப்பந்தம் எப்போது நடைபெறும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. கச்சா எண்ணையின் விலை சரிவால் சவுதிஅரேபியாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது.
அதை தொடர்ந்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் மறு சீரமைப்பு நடவடிக்கை மேற் கொண்டார். அதை தொடர்ந்து வெளி நாட்டு நிறுவனங்கள் சவுதி அரேபியாவில் வர்த்தக முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்