மஹிந்தவின் வீட்டில் மின் மற்றும் நீர் விநியோகம் துண்டிப்பு!முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமையில் அமைந்துள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணிநேரமாக இங்கு மிண்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டிலுள்ள  மின் பிறப்பாக்கி இயந்திரம் பழுதாகியுள்ளதாகவும், இதை புதுப்பிப்பிக்கும் பொறுப்பு கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக பல முறை அறிவுறுத்தியும் இ​தனை புதுப்பிக்க போதுமானளவு பணம் இல்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

-ஆர்.மகேஸ்வரி-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...