காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட ரிஷாட்டுக்கு அதிகாரமில்லை - விலாத்திக்குளம் அறிக்கை


மீள்குடியேற்றம் தொடர்பில் வில்பத்து விலாத்திக்குளம் வனப் பகுதியில் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்து வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனராலுக்கு உத்தரவு பிறப்பிக்க கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனுக்கு எந்தவித அதிகாரமிடும் உரிமையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலத்திக்குளம் வனப் பாதுகாப்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து வெளியாகியுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வனம் என விலத்திக்குள காட்டுப் பகுதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் 650 ஏக்கர் நிலப்பரப்பை பொது மக்களின் குடியிருப்புக்காக விடுவிப்பதற்கு வனப்பாதுகாப்பு ஜெனராலுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.