ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்

Share This


வெளிநாடு சென்று உழைப்பவர்களிடமிருந்து வரி என்ற பெயரில் அவர்களின்உழைப்பை சுரண்ட இவ்வரசு வெட்கப்பட வேண்டுமென ஹம்பாந்தோட்டைபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு அவர் மேலும் கருத்துவெளியிடுகையில்..

இவ்வரசானது வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் ஊழியர்களிடமிருந்துவரி அறவிட தீர்மானித்துள்ளதுபொதுவாக வெளிநாடு செல்பவர்கள் ஆசைப்பட்டுசெல்வதில்லை.அழுது புலம்பி குடும்பம் போன்ற அனைத்தையும் விட்டு விட்டேசெல்வார்கள்வெளிநாடு செல்லும் பெரும்பாலான ஊழியர்கள் ஏழைகளாகவேஇருப்பார்கள்வெளிநாடு சென்று அந்த ஊழியர்கள் அனுபவிக்கும் இன்னல்களைஒருவர் அறிவாராக இருந்தால் அந்த பணத்தில் ஒரு ரூபாய் எடுக்கவும் மனம்வராதுஏழைகளின் கஸ்டம் இவ்வரசுக்கு எங்கே விளங்கப் போகிறது.

இப்படியான ஒரு விடயத்தில் இவ்வரசு எடுத்துள்ள இத் தீர்மானமானது மிகவும்கண்டிக்கத்தக்கதுஇலங்கை நாட்டில் முஸ்லிம்களே அதிகம் வெளிநாட்டில்ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்இது முஸ்லிம் சமூகத்தின்பொருளாதாரத்தை மிக அதிகம் பாதிக்கும்இதனை மையப்படுத்தியும் இவ்வரசுஇம் முடிவை எடுத்திருக்கலாம்இவ்வரசு இனவாத சிந்தனையில் நீந்திகொண்டிருக்கின்றதல்லவா?

இலங்கையில் தொழில் பிரச்சினை நிலவுகின்றமை யாவரும் அறிந்த உண்மை.இன்று பல இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் குடும்பங்களை இழந்துபணியாற்றுகின்றனர்அவர்கள் வெளிநாடு செல்லாமல் இருந்திருந்தால் இன்றுஇலங்கை நாடு மிகக் கடுமையான தொழில் இல்லாத பிரச்சினையை எதிர் நோக்கிஇருக்கும்இந்த வகையில் சிந்திக்குக் போது வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள்இலங்கை நாட்டை பாரிய தலையிடியிலிருந்து விடுவிபட உதவி செய்கின்றனர்.இலங்கை அரசு இவர்களுக்கு உதவ வேண்டுமா அல்லது அவர்களது பணங்களைசுறண்ட வேண்டும்.

இலங்கை அரசு இப்படி ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தீர்மானத்தைஉடனடியாக வாபஸ் பெற வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE