குளியாபிட்டி தங்கொட்டுவ பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலையில் முகம் கழுவுவதற்காக சென்ற வேளையிலேயே அவர் கிணற்றில் வீழ்ந்ததாகவும் இன்று மதியமே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 31 வயதுடைய திருமணமாகாத இளஞைர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share The News

Post A Comment: