இஸ்லாமியப் பெண்களும் இலங்கை அரசியலும்இலங்கையின் புதிய தேர்தல் திருத்தச் சட்டம் காரணமாக ஒவ்வொரு தேர்தலிலும் பெண் வேட்பாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சபைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏனைய சமூகங்களை விட இந்த இடத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான தகைமை மற்றும் செயற்பாட்டில் பெரும் சவால்களை எதிர்கொள்ளப் போவது இஸ்லாமியப் பெண்கள்தான். ஏனெனில் மார்க்கத்தின் வரையறைக்குள் தம்மை பேணிக்கொண்டு அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் நெருக்கடியான நிலைமைகளையே உருவாக்கும்.
அதே நேரம் இதுவரை காலமும் இஸ்லாமியப் பெண்களை நெருங்கி வர முடியாமல் தவித்த சிலருக்கு, பதவி என்ற கேரட் ஒன்றைக் காட்டி இஸ்லாமியப் பெண்களை உரசும் சந்தர்ப்பத்தை இதன் மூலம் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற ஆவலும் தலைதூக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.
பெண்கள் என்றாலே பலருக்கும் பகிர்ந்து கொள்ளப்பட்ட விமல் வீரவங்சவின் கட்சியிலும் பதவி எதிர்பார்ப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்த பெண்களும் இருக்கவே செய்தார்கள். நான்கு பேருக்கு மத்தியில் ஒரு பிரபல்யத்தை அடைந்து கொள்வதற்காக முக்காடுகளை நீக்கிவிட்டு முழுக்க நனைவதற்குத் தயாரான இலங்கையின் தஸ்லிமா நஸ்ரின்களும் இல்லாமல் இல்லை.
எனவே அரசியல் செய்யப் போகும் பெண்களே.. ஆண்கள் என்றால் இரத்த உறவுகள் தவிர்ந்த ஏனைய அனைவரும் நம்பத்தகாதவர்களே என்ற முன்னெச்சரிக்கை உங்களுக்கு அவசியம். அந்த முன்னெச்சரிக்கை உங்களிடம் இருந்தால் அமைச்சர்களுடனான சந்திப்புகளுக்காய் நட்சத்திர ஹோட்டல்களுக்கான அழைப்புகளை நீங்கள் தவிர்த்துக் கொள்ள முடியும்.
இல்லை அரசியல் பதவிதான் முக்கியம், முக்காட்டுக்குப் பின்னால் இருக்கும் தன்னொழுக்கம் எங்களுக்குத் தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்காக பரிதாபப்படுவது தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.
#நீலத்தில் அரசியல் செய்வதற்காக நீலக்காட்சிகளை அரங்கேற்ற ஒத்துழைத்த சம்பவமொன்று குறித்த சாட்சியத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.