தேர்தலில் போட்டியிடாதிருக்க சாய்ந்தமருது ஹக்கீம் தீர்மானம்!!எம்.வை.அமீர்-

எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கல்முனை மாநகரசபைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் 23வது வட்டாரத்தில் போட்டியிட விருந்த தொழிலதிபரும் சுகததாச விளையாட்டு மைதான பணிப்பாளர்களில் ஒருவரும் முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது 16 ஆம் பிரிவு அமைப்பாளருமான ஹக்கீம் ஷரீப் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் குறித்த தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஹக்கீம், கடந்த காலங்களில் கட்சியின் நலனில் அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்டவர்களில் ஒருவருகும்.
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது என்றும் அந்தக் கோரிக்கையை வென்று எடுப்பதற்க்காக பள்ளிவாசல் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே தான் இவ்வாறானதொரு அவசரமான முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கும் அதேவேளை கட்சியில் தொடர்ந்தும் இணைந்திருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.