கையடக்க தொலைபேசிக்கு ஆசைப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி!மீரிகம பகுதியில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் நேற்றிரவு முதல் காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 14 வயதுடைய குறித்த சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரிகம பகுதியில் இடம்பெற்ற பெரஹெர வை பார்வையிடுவதற்காக அயல் வீட்டிலுள்ள சிறுவனுடன் சென்றுள்ளார். சென்ற வேளையில் தாடி வளர்த்த ஒருவர் கையடக்க தொலைபேசி தருவதாக கூறி அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் குறித்த சிறவன் திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயல் வீட்டு சிறுவன் வீடு திரும்பிய பின்னரே குறித்த தகவலை தெரிவித்துள்ளார். காணாமல் போன சிறுவன் குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்பதோடு, காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.