ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - இருவர் பலி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - இருவர் பலி

Share This
1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையில், காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் நேற்று மூன்று ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்தினர். அவற்றில் ஒரு ராக்கெட் இஸ்ரேல் நாட்டின் தென்நகரமான ஸ்டெராட் மீது விழுந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் இன்று காலை காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தின.

காஸா நகரின் மத்திய பகுதியில் உள்ள நுசெய்ரட் நகரின் மீது தாழ்வாக பறந்துசென்ற போர் விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் ஆயுத தொழிற்சாலை மற்றும் வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கு ஆகியவை நாசம் அடைந்ததாகவும், ஹமாஸ் போராளிகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE