பொத்துவில் பகுதியில் காட்டு யானை அட்டகாசம். முகம்மத் சலீம் உயிரிழப்பு.
இன்று காலை  பொத்துவில் களப்புக்கட்டு, அல் ஹுதா, பிரதான வீதியோரத்தை அண்டிய பகுதி, நான்காம் வாட் பகுதியில் காட்டு யானையின் அட்டகாசம் இடம்பெற்றதால் பிரதேசத்தில் அசாதாரண சூழல் இடம்பெற்றது.

முழு பொத்துவில் ஊரையும் ஸ்தம்பிதம் அடையச்செய்த ஒற்றை யானை பொருட்சேதத்துடன் உயிர்ச்சேதம் ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிகாலை நேரமளவில்அல்-ஹுதா பகுதிவழியாக- பாக்கியவத்தை ஊடாக பல இடங்களை தாண்டி  வந்து ஹிதாயாபுரம் சிறுவர் பூங்காவுக்கு அருகில் வரை சென்று பின்னர் சென்ற வழியே திரும்பி வந்து இப்போது  முஹுது மகா விகாரையில் தரித்திருக்கிறது.

மேலும் குறித்த யானை வீதியால் சென்றதை விட பொதுமக்களின் வீட்டு வளவால் ஊடறுத்து ஊடறுத்து தானாக பாதை எடுத்து சென்றதே அதிகம் இதனால்  பல பொருட்சேதம் விளைவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீம் முபா / பவாஸ் முஹம்மட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...