முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனையில் மண் கவ்வும் - தீனுல்லாஹ் பகீர் உரை!
பைஷல் இஸ்மாயில் 

அம்பாறை மாவட்ட, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான புறத்தோட்டம் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி. தீனுல்லாவை ஆதரித்து நேற்றிரவு (22) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பேசிய தீனுல்லாஹ், இம்முறை எமது கட்சி அமோக வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும், முஸ்லிம் காங்கிரஸ் டிபொசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்
இக்கூட்டத்தில் குறித்த கட்சியில் பாலமுனை வட்டாரத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.முனாப், முன்னாள் நீதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.ஏ.கபூர், புறத்தோட்டம் வட்டாரத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஏ.பி. தீனுல்லா ஆகியோர் தங்களின் கருத்துக்களை புறத்தோட்ட மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...