Dec 21, 2017

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற ஐ.நா., சபை இன்று வாக்கெடுப்பு



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா., சபையில் இன்று பொது வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

ஜெருசலேம் நகரை, மத்திய கிழக்கு நாடுகளான, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை தொடரும் நிலையில், ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ தலைநகராக அங்கீகரிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா.வில் இன்று பொது வாக்கெடுப்பு நடக்க உள்ளது. வாக்கெடுப்பில் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளின் பெயர்கள் குறித்து வைத்துக் கொள்ளப்படும் என ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்திருப்பது அமெரிக்காவின் பகிரங்க மிரட்டலாகவே தெரிகிறது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post