வீதி விபத்துக்களைத் தடுக்க பொலிஸ் புதிய யுக்தி!


இலங்கையில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த இலங்கை பொலிஸார் புதிய வழிமுறை ஒன்றைத் திட்டமிட்டுள்ளனர்.
வீதி ஓரத்தில் பொலிஸாரைப் போன்ற பொம்மைகளைக் காட்சிக்கு வைப்பதன் மூலம், வாகனத்தில் அதி வேகமாக வருபவர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே அந்தத் திட்டம்!
தூரத்தில் இருந்து பார்த்தால் உண்மையான பொலிஸ் அதிகாரி போலவே தோற்றமளிக்கும் இந்த பொம்மையை முக்கிய சந்திகள், சிறு நகரங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படக் கூடிய இடங்களில் நிறுவுவதன் மூலம் விபத்துக்கள் தடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு கூறுகிறது.
இந்தப் புதிய யுக்தியை அனுராதபுரம் பொலிஸாரே அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் இந்த ஆண்டு அதிகமான விபத்துக்களினால் உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் இவற்றில் பெரும்பாலானவை அதி வேகம் காரணமாக ஏற்பட்டவையே என்றும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.