எனக்கு வட கொழும்பிலேயே அச்சுறுத்தல்


வட கொழும்பில் மையம் கொண்டுள்ள ஒருசில அரசியல் நபர்களிடமிருந்தே எனக்குஉயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
மலைநாட்டிலும் எனக்கு அச்சறுத்தல் இல்லை. கொழும்பு மாவட்டத்திலும் மக்கள் மத்தியில் இருந்தும் எனக்கு அச்சறுத்தல் இல்லை.
வடகொழும்பில் எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாகவே எனக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.