நல்லாட்சியில் எதுவும் நல்லதாக இல்லை!எதிர்வரும் தேர்தலை ஒரு மக்கள் கருத்து கணிப்பாக கருதி, மக்கள் வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹோமாக பிரதேசத்தில் வைத்து நேற்று அவர் இதனை தெரிவித்தார். ஆளும் அரசாங்கத்திடம் நாட்டை கையளித்த போது காணப்பட்ட நிலமை தற்போது இல்லை.

கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு அடுத்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...