Dec 1, 2017

காலியில் நடந்தேறிய முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரம் - முழுதொகுப்பு!18ந் திகதி சனிக்கிழமை ஜின்தோட்ட துப்பாராமய புராண ரஜ மகா விகாரையின் முன்பாக இரண்டாவது முறையாக அந்த பிரகாசமான சிவப்பு நிற எஸ்.யு.வி வாகனம் கீரிச்சிட்ட ஒ
லியுடன் நிறுத்தப்பட்டபோது, அந்தி சாயும் நேரத்தில் விகாரையின் பிரமாண்டமான தோட்டத்தில் கூடியிருந்த கிராமவாசிகள் மத்தியில் உற்சாக ஒலி கிளம்பியது. மங்கலான வெளிச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த ஹைபிரிட் வாகனத்தின் முன் இருக்கையில் இருந்து ஒரு பிரபலமான உருவம் துள்ளி இறங்கியது. அது இனச்சிறுபான்மையினர் இதயங்களில் அச்சத்தை விதைக்கும் சர்ச்சைக்குரிய பொது பல சேனாவின் பிரதம குருவான கலகொட அத்தே ஞ}னசார தேரர் ஆவார் - முந்தைய இரவு இனக்கலவரத்தின் மையமாக விளங்கிய பிரதேசத்துக்கு அவர் திரும்பவும் வந்திருந்தார்.

இந்த முறை பதற்ற நிலையில் உள்ள காலி பிரதேசத்தில் சமாதானத்தை ஏற்படுத்துபவர் என்கிற பாத்திரத்தை நடிக்கும் உள்நோக்குடன் அவர் வந்திருக்கிறார், 17ந்திகதிய இரவில் அளவுக்கு அதிகமான சொத்து சேதத்தை ஏற்படுத்தி வாழ்வாதாரங்களை துடைத்தழித்த பல மணிநேர கும்பல் வன்முறையை தொடர்ந்து 19 பேர் கைது செய்யப் பட்டதின் பின் அங்கு பெரும் பதற்ற நிலை தோன்றியிருந்தது.
மாறுபட்ட வில்லன்கள் கொடூரமான வன்முறை
கதை சொல்பவர் கிராமத்தின் எந்தப் பக்கத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து வில்லன்கள் மாறுபடுகிறார்கள், ஆனால் குறைந்தபட்சம் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்வது, அது நவம்பர் 12ல் நடைபெற்ற சிறு வீதி விபத்தில் இருந்து ஆரம்பமானது என்று, கிராமத்துப் பையன்களுக்கிடையே மீண்டும் மீண்டும் ஏற்பட்ட சிறு மோதல்கள் விரிவடைந்து இறுதியில் கொடூரமான இனவெறி வன்முறையாக மாற்றம் பெற்றது.
வியாழக்கிழமை(16), வன்முறைக்கு முந்திய இரவில், வரப்போகும் உள்ளுராட்சிமன்ற தேர்தல்களில் போட்டியிடவிருப்பதாக நம்பப்படும் உள்ளுர் முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர், ஜின்தோட்டயில் உள்ள சிங்கள குடியிருப்பாளர்களைத் தாக்குவதற்காக சுற்றுப்புற பகுதி கும்பல்களுக்கு தலைமை தாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மூன்று வீடுகள் சேதமடைந்ததின் பின்னர், உள்ளுர் அரசியல்வாதி உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். வெள்ளிக்கிழமை இரவு இதற்குப் பதிலடி கொடுக்கப்பட்டது.
டசின் கணக்கான முஸ்லிம் வீடுகள் மற்றும் வணிக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்ட இந்தக் கலவரம், 2014 அளுத்கம இனக்கலவரத்தின் கசப்பான நினைவுகளை திரும்ப நினைவுபடுத்தியது. முக்கியமாக முஸ்லிம் பகுதிகளில் சொத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பது உடனடியாக வெளிப்படையாகத் தெரிந்தது. முச்சக்கர வண்டிகள் உந்துருளிகள், ஒரு செங்கல் விற்பனை நிலையம் மற்றும் கடைகள் என்பன தாக்குதலாளிகளால் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. வருமானம் தருபவவை மற்றும் வாழ்வாதாரமாக உள்ளவைகளே அழிக்கப் படுவதற்கான இலக்குகளாக மிகக் கவனமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
எரிக்கப்பட்ட சொத்துக்களில் சில சனிக்கிழமை மாலையில் கூட இன்னும் எரிந்தபடியே காட்சி தந்தன. அந்த இடிபாடுகளுக்கு மத்தியில் இன்னமும் எரிந்து கொண்டிருந்த மளிகைக் கடை, 58 வயதான சிங்கள வர்த்தகர் டி.லியனகே என்பவருக்குச் சொந்தமானது. அவருடைய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் மஹா ஹப்புகல பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆவர். அந்தச் சேதத்துக்கு காரணம் ஒரு பெற்றோல் குண்டு என்று லியனகே தெரிவித்தார். அவரது அயலவரான மொஹமட் ரிஷ்மி, லியனகேயின் கடைக்கு ஏற்பட்ட சேதத்தைக்கண்டு அதே அளவு  வருத்தம் அடைந்திருந்தார். “அவர்கள் எங்கள் சகோதரர்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த யாரும் இதைச் செய்திருக்க மாட்டார்கள”; என அவர் வலியுறுத்தினார்.
வீதியில் இன்னும் சற்றுத் தள்ளி, என்.வை.எம் பாஹீம் தனது சீமேந்து கல் தயாரிக்கும் வணிக நிலையத்துக்கு ஏற்பட்டுள்ள சேதத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார், மற்றும் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருக்கும் அவரது எட்டு வயது மகன் உட்பட அவரது குடும்பத்தினரை இந்த திடீர் வருமான இழப்பு எப்படி பாதிக்கப் போகிறதோ. ஒவ்வாரு வாரமும் பாஹீம் தனது மகனை மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்கிறார் அத்துடன் விலை மதிப்பான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளையும் பிள்ளைக்காக அவர் வாங்கியாக வேண்டும். பாஹீம், அவரது வியாபார நிலையம் மற்றும் அவரிடம் வேலை செய்யும் ஏழு அல்லது எட்டு நாட்கூலித் தொழிலாளர்கள் மனச்சோர்வடைந்துள்ளார்கள். அவருடைய வணிக நிலையத்தை தாக்கியவர்கள், 800 புதிய சீமேந்துக் கற்களை நசுக்கியதுடன் அவரது பார ஊhதியையும் தீவைத்து சேதமாக்கியுள்ளார்கள். “சீமேந்துக் கற்களை என்னால் திரும்பவும் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் எனது வாகம் இல்லாமல் அதை நான் எப்படி விநியோகம் செய்வது? என்று கதறுகிறார் அவர்.
குடியிருப்பு வாசிகள் விளக்குவது, வன்முறை ஆரம்பித்ததுமே நாங்கள் எங்கள் வீடுகளுக்குள் ஓடிச் சென்று, மின்விளக்குள் யாவற்றையும் அணைத்து விட்டோம் என்று. “நாங்கள் தெருவிளக்குகளைக் கூட அணைத்து விட்டோம்” என்கிறார் கட்டிலுக்கு அடியில் தனது மகள்மார் மற்றும் அவர்களது பிள்ளைகளுடன் ஒளிந்திருந்த முகமட் யூசுப் என்பவர்.
யூசுப் குற்றம்சாட்டுவது அவரது வீட்டுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டது விசேட அதிரடிப் படையினர் சுட்டதினால்தான், ஏனென்றால் தாக்குதலாளிகள் கும்பல் ஒன்று, ஆயுதம் தாங்கிய துருப்புகள் வீதியில் வருவதைக் கண்டதும் அவரது வீட்டைக் கடந்து வேகமாக ஓடியுள்ளார்கள். “ஆயுதப் படையினர் நாங்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாக நினைத்துவிட்டார்கள், அதனால் அவர்கள் எனது வீட்டை நோக்கிச் சுட்டுள்ளார்கள்”, “துப்பாக்கிக் குண்டுகள் யன்னல்களின் கண்ணாடிகளைச் சிதறடித்ததினால் கண்ணாடித் தூள்கள் வீடு முழுக்க பரவியுள்ளது என் யூசுப் முறையிட்டார்.
தர்கா நகர், அளுத்கம என்பனவற்றைப் போலவே பல குடியிருப்பு வாசிகளும் தாக்குதலாளிகள் அந்தக் கிராமவாசிகள்தான் என்பதைத் தங்களால் அடையாளம் காண முடியவில்லை எனத் தெரிவித்தார்கள். காவல்துறைப் பேச்சாளரான எஸ்பி ரூவான் குணசேகரா, அரசியல் மற்றும் இனரீதியாக ஊக்குவிக்கப்பட்ட சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த கும்பல்கள் 16ம் மற்றும் 17ம் திகதிகளில் ஜின்தோட்டயில் திரட்டப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
வளரும் பயம் மற்றும் சந்தேகம்
ஜின்தோட்ட கிழக்கு, ஜின்தோட்ட மேற்கு, மஹா ஹப்புகல, குருந்துவத்த, உக்வத்த, வெலிப்பிற்றிமோதர மற்றும் பையாடிகம போன்ற கிராமங்கள் உட்பட கடற்கரையை அடுத்து கொத்தாக உள்ள கிராமங்களே வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 3,000 முஸ்லிம்கள் மற்றும் 600 சிங்களவர்கள் இந்தப் பிரதேசத்தில் நகமும் சதையும் போல கலந்து வாழ்கிறார்கள், கிராமவாசிகள் வித்தியாசமின்றி ஒருவருடன் ஒருவர் இணைந்துள்ளார்கள், வியாபாரம், பாடசாலைகள், விளையாட்டு மைதானம் மற்றும் வீதிகள் போன்ற் சமுதாய வசதிகளால் அவர்கள் தொடர்பு பட்டுள்ளார்கள்.
சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபாரங்களில் அயலவர்கள் அல்லது வியாபார நிறுவனங்கள் போன்றவற்றினால் சில இடையூறுகள் ஏற்படுவதாக சிறு சிறு புகார்கள் வருவதுண்டு, ஆனால் பொதுவாக தாங்கள் அவைகளை அமைதியாகவே தீர்த்துக்கொள்வதாக குடியிருப்பாளர்கள் வலியுறுத்திக் கூறினார்கள். பெரும்பாலான ஜின்தோட்ட குடியிருப்பாளர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு நடந்த வன்முறை ஒரு மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது, ஆனால் இந்தப் பகுதியில் இருந்து வெளிப்படும் மற்றைய அரசியல் மற்றும் மதக் காரணிகள், காலப்போக்கில் இரு சமூகங்களுக்கு இடையில் அச்சம் மற்றும் சந்தேகம் வளரக்கூடும் எனக் குறிப்பிடுகின்றன.
ஆரம்பத்தில் அது ஒரு சின்ன விஷயமாக இருந்தது” என்று விளக்குகிறார் ஜின்தோட்ட ஹில்லூர் மசூதியின் இமாம் ஆன மொகமட் நஸீர், அவர் சனிக்கிழமை பி.ப. 6.00 மணிக்கு ஆரம்பமாவதற்கு குறிப்பிட்டிருந்த ஊரடங்குச் சட்டத்துக்கு முன்னதாக மசூதி வளாகத்தை பூட்டுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
வெள்ளி இரவு அநேகமான அயல் பக்கத்தையும் வன்முறை உலுக்குவதற்கு சற்று முன்னரே விசேட அதிரடிப்படையினரை திருப்பி அழைத்த முற்றுப் பெறாத செயல் மற்றும் அவர்களது செயலற்ற தன்மை குறித்து குற்றம் சாட்டப்பட்டதால் காவல்துறையினர் கலகம் ஏற்படுவதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிட விரும்பவில்லை. அந்த சிறிய கிராமத்தில் இருந்த ஒவ்வொரு மசூதி மற்றும் ஆலயங்கள் எல்லாவற்றுக்கும் இராணுவம், கடற்படை அல்லது காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் நஸீருக்கு கவலையளிப்பது என்னவென்றால், வன்முறையில் சிறிய சேதத்துக்கு உள்ளாகியிருந்த ஹில்லூர் மசூதியில் பி.ப. 7.30 மணிக்கு நடத்தப்படவேண்டிய மக்கிரிப் பிரார்த்தனையை இரவு ஊரடங்குச் சட்டம் காரணமாக நடத்த முடியாமல் போனதுதான். ஜின்தோட்ட கடந்த காலங்களிலும் கூட இனக்கலவர பதட்ட நிலையை அனுபவித்திருந்தது என்பதை இமாம் ஏற்றுக்கொள்ளுகிறார். “ஆனால் இந்த விடயங்கள் அடிக்கடி மசூதியை தாக்குவதற்கு வழி வகுத்ததில்லை” என்று அவர் உத்வேகத்துடன் சொன்னார். மசூதியில் சி.சி.ரி.வி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன, ஆனால் அந்த காணொளிகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு காவல்துறையினர் இன்னமும் வரவில்லை என்று நஸீர் சொன்னார்.
முஸ்லிம் மதகுருவின் கூற்றுப்படி, உண்மையான குழப்பம் ஆரம்பமானது எப்போதென்றால், துப்பாராமய விகாரையின் பிரதம பிக்கு அருகிலுள்ள கிராமங்களிலுள்ள குடியிருப்பாளர்களை ஆலய மைதானத்துக் வரவழைத்து அவர்களைத் தூண்டிவிட்ட போதுதான். “இரண்டு மணித்தியாலங்களாக அவர்களுக்கிடையே சந்திப்பு நடந்தது. மக்கள் அங்கு தூண்டிவிடப்பட்டார்கள்” என்று இமாம் விளக்குகிறார்.
இமாம் குறிப்பிடும் துப்பாராமய ஆலயம் நஸீரது மசூதியில் இருந்து ஒரு கல்லெறி தூரத்தில் உள்ளது மற்றும் அது அம்பலாங்கொட சுமேதானந்த தேரோவின் தலைமையில் இயங்கி வருகிறது. இளமையானதும் மெல்லிய தோற்றமும் உடைய சுமேதானந்த தேரோ, தன்னை ஒரு பௌத்த கல்விமான் மற்றும் எழுத்தாளர் என்று குறிப்பிடுகிறார், ஜின்தோட்ட ஆலயத்தில் அவர் 18 வருடங்களாக இருந்து வருகிறார். ஆலயத்தில் உள்ள பிக்குகள்தான் கடந்த வெள்ளியன்று  அந்தப் பிராந்தியத்தில் வன்முறையை தூண்டிவிட்டார்கள் என்று கூறப்படும் குற்றச்சாட்டை அவர் ஆவேசமாக மறுத்துரைத்தார்.
“பிரச்சினை வீதி விபத்தில் முளைவிட்டது, அதைத்தொடர்ந்து சிங்கள மற்றும் முஸ்லிம் குடியிருப்பாளர்களிடையே பதட்டங்கள் அதிகரித்தன. இது கிராமத்துப் பாடசாலையில் ஒரு சிறிய மோதலுக்கு வழிவகுத்தது” என்று பிக்கு விளக்குகிறார்.” நாங்கள் வெள்ளியன்று குடியிருப்பளர்களை ஆலயத்துக்கு வரவழைத்தது, பாடசாலையில் சச்சரவுகளில் அவர்களின் பிள்ளைகள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும்படி பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குவதற்காகவே” என்று அவர் வலியுறுத்தினார்.
பொதுபலசேனாவுடன் ஒரு கூட்டு இருப்பதை பிரதம பிக்கு கடுமையாக மறுத்தார், அந்த இயக்கத்தைச் சேர்ந்த பிக்குகள் நவம்பர் 17ல் நடந்த சம்பவம் பற்றி ஒரு ஆவணம் தயார் செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்புவது பற்றி கலந்துரையாட அங்கு வந்திருந்தாலும் கூட அந்த இயக்கத்துடன் தனக்கு கூட்டு எதுவும் இல்லை என அவர் கூறினார். ஆனால் பொது பல சேனா மற்றும் இராவண பலய போன்ற குழுக்களால் பரப்பப்படும் இதே சித்தாந்ததைக் காட்டிலும் அநேகமான அவரது வார்த்தைகள் நுட்பமான வேறுபாட்டைக் கொண்டிருந்தன.
முஸ்லிம்கள் பல பெண்களை மணம் செய்து டசின் கணக்கான பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறார்கள், என்று அவர் முறையிட்டார். “சிங்கள குடியிருப்பாளர்களிடம் இருந்து இருமடங்கு விலை கொடுத்து அவர்களின் காணிகளை விலைக்கு வாங்கி விகாரையை தனிமைப்படுத்துவதற்காக பௌத்தர்களை ஜின்தோட்டவை விட்டு வெளியேற்றுகிறார்கள்” என அவர் வலியுறுத்தினார்.
முஸ்லிம் சமூகத்தின் தீவிரமயமாக்கலைப் பற்றி குரல் கொடுக்கையில் சுமேதானந்த தேரர் சொன்னது, அவர்களது ஆர்வம் மற்றைய ஒவ்வொருவரைக் காட்டிலும் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று காட்டுவதிலேயே தங்கியுள்ளது, பெண்கள் தங்கள் தலைகள் மற்றும் கண்களை மறைத்துக் கொண்டு மற்றும ஆண்கள்; தாடிகளை வளர்த்துக்கொண்டும் இருக்கிறார்கள், இதன் காரணமாக பல தலைமுறைகளாக பக்கத்துக்கு பக்கமாக வாழ்ந்த இரண்டு சமுதாயங்களிடையே உறவில் முறிவு ஏற்பட்டுள்ளது என்று.
துப்பாராமய விகாரையின் பிரதம குருவும் கூட கடந்த வார வன்முறைக்கான பழியை பிரதேச சபை உறுப்பினர் மொகமட் நிஸாரின் காலடியிலேயே சமர்ப்பித்தார். கியாஸ் என்கிற மொகமட் நிஸார் புதன்கிழமை இரவு சுமார் 300 குண்டர்களை ஜின்தோட்டவுக்கு கொண்டுவந்து சிங்களவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தினார்.
“இதுபற்றி நான் காவல்துறை ஐ.ஜி.பி இடம் பேசினேன் மற்றும் அவர்  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன் விசேட அதிரடிப் படையினரையும் பணியில் ஈடுபடுத்தினார்,  அந்த தாக்குதலுக்காக 300 பேர்கள் வந்தார்கள், ஆனால் காவல்துறையினரால் மூன்று பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்கள்” என்று சுமேதானந்த தேரர் முறையிட்டார். துப்பாராமயவின் பிரதம குரு தெரிவிப்பது, முஸ்லிம் தலைவர்கள் வியாழன் நடந்த சம்பவம் பற்றி தங்கள் மக்களை எச்சரிக்கை செய்ததாகவும் மற்றும் வெள்ளிக்கிழமை  பிரார்த்தனையின் போதுதான் கைதுகள் நடைபெற்றன என்று. “இது பௌத்தர்களை கவலைப்பட வைத்தது, அது ஏராளமான சந்தேகத்தையும் உருவாக்கியது என்று சுமேதானந்த தேரர் ஏற்றுக் கொள்கிறார்.
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், வியாழன் இரவு சம்பவத்தில் உள்ளுர் அரசியல்வாதியின் தலையீடு மற்றும் ஜின்தோட்டயில் ஒரு வாரம் முந்தி நடந்த  வீதி விபத்து காரணமான பதட்டம் காரணமாக வெள்ளி முழுவதும் மோதல்கள் எற்பட வழிவகுத்தது, ஆனால் குடியிருப்பாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகள் ஆகியோர் அன்று மாலையே அந்த பிரதேசத்தில் ஒழுங்கை பாராமரிப்பதற்காக கொண்டு வந்திருந்த விசேட அதிரடிப்படையினரை வெளியேற்றியதின் காரணமாக பதட்டத்தை தணித்து சமாளித்தார்கள்.
பொது பல சேனாவின் (பிபிஎஸ்) தொடர்பு பற்றிய குற்றச்சாட்டு
ஆனால் ஆலயத்தில் நடைபெற்ற கூட்டம் அந்த நிலமையை திரும்பவும் அதிகரித்தது என்று கூறுகிறார் இமாம் நஸீர்.
“உங்களுக்குத் தெரியுமா பிக்கு ஞ}னசாரா கூட இன்றுடி இங்கு வந்திருந்தார்” என்று ஒரு தணிந்த குரலில் இமாம் சொல்கிறார். துப்பராமய ஆலயத்தின் ‘அழகான இளம் பிக்கு’ பொது பல சேனா இயக்கத்தின் உதவிச் செயலாளர் என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.
இயக்கத்துடன் உள்ள பிக்குவின் உறவு பற்றி நஸீர் தெரிவித்த கருத்தை பிக்குவின் நெருங்கிய உள்வட்டத்தில் உள்ளவர்களைத் தவிர பெரும்பாலான சிங்கள குடியிருப்பாளர்கள் உறுதிப்படுத்தினார்கள். பிக்குவின் உள்வட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆலய மைதானத்தில் வைத்து நிருபர்களின் கண் முன்னாலேயே வெளிப்படையாகவே சத்தமிட்டார்கள். கிராமத்து துறவியின் இந்த ஆதரவாளர்கள் தீவிரவாத சிங்கள இயக்கத்துடன் அவருக்கு தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவதை பெரிதாக சத்தமிட்டு அளவுக்குமீறி எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
இது ஒரு பொது இடம், எந்த ஒரு பிக்குவும் இங்கு வருவதை எங்களால் தடை செய்ய முடியாது” என்று ஆலயத்திலிருந்த ஒரு இளைஞன் தெரிவித்தான், பௌத்த கொடியின் நிறத்தில் புனையப்பட்ட ஒரு நட்புநாடாவை அவன் தனது கரத்தில் அணிந்திருந்தான். “ஞ}னசார தேரர் இங்கு வந்தது எதனாலென்றால் சிங்களப் பையன்கள் கைது செய்யப் பட்டுள்ளார்கள் என்பதால்தான், அல்லாமல் எங்களுடன் உள்ள விசேட நட்புறவால் அல்ல. எங்கள் பிக்குவுக்கு பொதுபல சேனாவுடன் எந்த சம்பந்தமும் இல்லை” கேட்காமலே அவர் வலியுறுத்திக் கூறினார். மற்றொரு துறவியுடன் கலந்துரையாடிய அந்த இளைஞன் ஆலயத்தை விட்டு வெளியே போகும்படி எங்களை கடுமையாக வற்புறுத்தினான். “இந்த சம்பவம் பற்றி ஊடகங்களுக்குத் தெரிவிப்பதற்கு எங்களிடம் எதுவுமில்லை, எப்படியாயினும் ஊடகங்கள் எப்பொழுதும் முஸ்லிம்களின் பக்கத்தையே எடுக்கும். சிங்களவர்கள் எப்போதுமே கெட்டவர்கள்தான்” என்று ஏளனம் செய்தான் அவன்.
ஞ}னசாரவின் தலையீடு

ஞ}யிறு மாலை அந்தி சாயும் நேரம் காலியில் நடைபெற்ற கூட்டத்தின்பின்னர் ஆலயத்தில் குழுமியிருந்த கிராமவாசிகள் கூட்டத்தை நோக்கி ஞ}னசார தேர நடந்தபோது, அந்த இளைஞன் அவர் அருகே விரைந்து சென்று அவர்கள் மத்தியில் ஊடகவியலாளர்களும் இருப்பதாக எச்சரிக்கை செய்தான். உயரமான மூக்குக்கண்ணாடி அணிந்த பொது பல சேனாவின் தலைவர் அதைப்பற்றிக் கவலைப் படாதவர் போலத் தோன்றினார். என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று மெல்லச் சிரித்த அவர், ஆலயத்தில் இருந்த சிறிய மண்டபத்தை நோக்கி நடக்கலானார்.
வெள்ளியிரவு வன்முறைக்கு வழிவகுத்த  தவறான புரிந்துணர்வுகளை களைவதற்காக அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் பிரதிநிதிகள் நடத்திய சந்திப்பு பற்றி காலி மாவட்டச் செயலகத்தில் இருந்து கிடைக்கப்போகும் செய்தியை எதிர்பார்த்து சிங்கள குடியிருப்பாளர்கள் துப்பாராமய ஆலயத்தில் மணிக்கணக்காகக் காத்திருக்கிறார்கள். வெள்ளியிரவு வன்முறை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 19 பேரில் 16 பேர் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் ஆவர். தங்கள் பையன்களின் விதி பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் கிராமவாசிகள் தங்கள் நம்பிக்கையை  அன்று பிற்பகல் காலிக் கச்சேரியில் தலையீடு செய்திருந்த ஞ}னசார தேரரின் மேல்வைத்திருந்தார்கள்.
ஞ}னசார தேரர் கூட்டத்தின் முன்னால் உரையாற்றுவதற்கு முன்பு அயல் கிராமங்களைச் சேர்ந்த பிக்குகள், பொது பல சேனாவின் பிரதம குருவின்மீது நம்பிக்கை வைத்து அவர் கூறும் அறிவுரைகளைக் கேளுங்கள் என்று மக்களை வலியுறுத்தினார்கள். பொது பல சேனாவின் தலைவர் தலையீடு செய்தது சிங்களக் கிராமங்கள் தொடர்பாகவும் மற்றும் கலகத்தின் பின்னர் அதன் பாதுகாப்பு தொடர்பாகவுமே என்று கோவில் மண்டபத்தில் கூடியிருந்த மக்களிடம் பிக்குகள் சொன்னார்கள்.
அவரது இயல்பின்படி அல்லாமால் நிதானமாக ஞ}னசார கிராமத்தவர்களிடம் வலியுறுத்தியது, அமைதி காக்கும் படியும் மற்றும் மேலும் மோதல்களைத் தவிர்க்கும் படியும். கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கான எழுத்து வேலைகள் யாவும் ஏற்கனவே பூர்த்தியாகி விட்டதால், கிராமத்துப் பையன்களை வெளியே எடுப்பதற்காக தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று பிபிஎஸ் பிக்கு கூட்டத்தினரிடம் கூறினார். “காவல்துறை காரணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் மற்றும் திங்கள் அளவில் அவர்கள் வெளியே வந்து விடுவார்கள்” என்று அவர் வாக்குறுதி வழங்கினார், “ ஆனால் இங்கு இனிமேலும் மோதல்கள் இடம்பெறாது என்று நீங்கள் உறுதியளித்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்”.
விநயமான மற்றும் அச்சுறுத்தும் செய்திகள்
ஜின்தோட்டயில் வீசிய புயலைச் சாந்தப்படுத்தும் விதமான அவரது பேச்சில் வரிகளுக்கிடையே விநயமான அச்சுறுத்தும் செய்தியும் அடங்கியிருந்தது.
“எங்கள் உரிமைகளுக்காக போராட்டத்தைத் தொடரவேண்டியது மிகவும் முக்கியம் நாங்கள் யாரிடமும் பணிந்து போகத் தேவையில்லை. ஆனால் நாங்கள் மூலோபாயத் திறன் உள்ளவர்களாகவும் இருப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்” என்று ஆலயத்தில் கூடியிருந்த கூட்டத்தினருக்கு அவர் ஆலோசனை வழங்கினார். மாவனல்ல மற்றும் தர்கா நகர் பகுதியிலும் ஏற்பட்ட இதே போன்ற இன வன்முறைகளின் அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்க வேண்டும் என்று ஞ}னசார தேர சொன்னார்.
“கதவுகள் மற்றும் யன்னல்கள் உடைக்கப்பட்டன மற்றும் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. அடுத்த வாரமே நிதியுதவி மூலமாக நான்கு மாடிக் கட்டிடங்கள் அங்கு எழுந்து நின்றன. எனவே கற்களை வீசுவதன் முலம் எதையுமே அணுக முடியாது” என்று அவர் விளக்கினார். “ஒழுங்கைச் சீர்குலையாதீர்கள்”. சிங்கள மக்கள் இதை ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும். உங்கள் கிராமத்து பிக்கு மற்றும் காவல்துறையினருடன் ஒன்று சேர்ந்து நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு முகம் கொடுங்கள்” என்று ஞ}னசார தேரர் வலியுறுத்தினார். சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மோதலின் பின்னான பொதுவான இலக்கு “பையன்களை வெளியே எடுப்பதுதான்” என்று பொதுபலசேனாவின் துறவி சொன்னார்.
நீடித்துள்ள கேள்விகள்
பதற்றம் நிறைந்த ஜின்தோட்டயில் அன்றைய நாளின் முடிவில், அரசாங்க அமைச்சர்கள்,                சர்ச்சைக்குரிய பொது பல சேனாவின் தலைமைக் குருவை, குழப்பமான பிரதேசத்தில் பதற்றத்தை தணிப்பதற்காக அவர் ஆற்றிய பங்களிப்புக்காக பகிரங்கமாக புகழந்தார்கள். ஆனால் இன்னமும் நீடித்துள்ள கேள்விகள் என்னவென்றால், இந்த சர்ச்சைக்குரிய பிக்குவை ஜின்தோட்டைக்கு மிகவும் விரைவாக  ஓடவைத்த காரணிகள் எவை? ஏன் கிராமத்து பிக்குகள் அவரது ஆலோசனையை கேட்கும்படி தங்கள் மக்களை ஊக்கப்படுத்தினார்கள்? மற்றும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவருக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டது? கிட்டத்தட்ட வன்முறை வெடித்து ஒரு வாரத்தின் பின்னும் இந்தக் கேள்விகளுக்கு விடைகாணப்படாமலே உள்ளது, ஆனால் பொது பல சேனாவின் நிழல் மற்றும் அதேபோன்ற மனநிலையிலுள்ள குழுக்கள் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய அச்சம் மற்றும் அவநம்பிக்கை பற்றிய செய்திகளைத் தூண்டுகின்றன சமீபத்தில் நடைபெற்ற ஜின்தோட்ட இனக்கலவரத்திலும் இது தொக்கி நிற்கிறது.
நாடு முழுவதிலுமுள்ள சிறிய கிராமப்புற ஆலயங்களில், முஸ்லிம் சமூகத்தின் வளர்ந்து வரும் ஒதுக்கவியல்பு மற்றும் பழமைவாதம் என்பனவற்றுடன் கலவையான அச்சம் மற்றும் வெறுப்பு என்பனவற்றைத் தூண்டிவிடுவதால், இன ரிதியான பல்வேறு பிரிவுகளுக்கு  குறிப்பாக பிரிவினைவாத வன்முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காலப்போக்கில் இத்தகைய சமூகங்களுக்கிடையே அச்சம் மற்றும் சந்தேகம் என்பன கொளுத்தி எறியப்;பட்டால்,தீ விபத்தினை எற்படுத்துவது எவ்வளவு சுலபம் என்பதை தர்கா நகர், மாவனல்ல மற்றும் ஜின்தோட்ட என்பன நிரூபித்துள்ளன.
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
(நன்றி: டெய்லி எப்ரீ)

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network