பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தாமரைக்கு தாவினார்?


கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவை இலக்கு வைத்து பேஸ்புக் ஊடாக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘ஸ்ரீ லங்க பிரிட்ஜ்’ என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தில் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும பொதுஜன பெரமுன கட்சிக்கு தாவினார் என்ற செய்தி நேற்று பரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் கத்துத் தெரிவிக்கையில்,
களுத்துரை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்பில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு அங்கிருந்து நேரடியாக களுத்துரை விஹாரைக்கு சென்றிருந்தேன். அங்கு ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட எதிரணி உறுப்பினர்களை எதிர்பாராத விதமாக சந்திக்க நேரிட்டது.
இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்துகொண்டு சிலர் போலிப்பிரசாரங்களை பேஸ்புக் வாயிலாக முன்னெடுத்து வருகின்றார்கள். இவ்வறான செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்று நான் ஒருபோதும் சிந்திக்கவில்லை.
எதிரணி உறுப்பினர்களை மனிதாபிமான நோக்கத்திலேயே சந்தித்து பேசினேன். அதனால் கட்சிதாவும் எண்ணமும் எனக்கு ஒருபோதும் வரவில்லை.” எனக் கூறியுள்ளார்.
பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தாமரைக்கு தாவினார்? பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தாமரைக்கு தாவினார்? Reviewed by NEWS on December 22, 2017 Rating: 5