Dec 12, 2017

உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சில் கூடுங்கள்- அர்துகான் அழைப்பு


டிரம்பின் அறிவிப்புக்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்த உலக முஸ்லிம் நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சிலை எதிர்வரும் புதன்கிழமை கூடுமாறு துருக்கி ஜனாதிபதி ரஷீப் தையிப் அர்துகான் அழைப்பு விடுத்துள்ளார்.
துருக்கியின் ஸ்தன்பூல் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   துருக்கி மற்றும் பலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு மக்கள் வெள்ளம் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர்.
ஜெரூசலம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post