மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகளை தண்டிப்போம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரித்து நாட்டினை நாசமாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின்  உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்க தயங்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற அக்கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.