நான் மர்ஹூம் மசூரின் தீவிர ஆதரவாளர் - வேட்பாளர் ஆப்தீன் உருக்கம்!மர்ஹூம் மசூர் சின்னலெ்வையின் தீவிர அரசியல் ஆதரவாளர் என்பதில் எப்பாதும் எனக்கு பெருமைதான் என முஸ்லிம் அட்டாளச்சேனை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் தமீம் ஆப்தீன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சிலோன் முஸ்லிம் செய்தியாளருக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார், மேலும் கருத்துரைத்த ஆப்தீன்,

என்னையும் றியா மசூரையும் பிரிப்பதற்கும், மூட்டிவிடுவதற்கும் பல கழுகுகள் பறந்து கொண்டிருக்கிறது, இது அப்பட்டமான பொய் முற்றுமுழுதாக நான் றியாவுக்கு ஆதரவு, அவருடைய தந்தையே எனக்கு அரசியல் குரு அதனை ஒருபோதும் மறவேன் என்றார். சதிவேலைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளியாக தேர்தல் முடிவுகள் இருக்கும் என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...