தேர்தல் காலத்தில் சட்டத்தை மீறி தென்னங்கன்று விநியோகம்


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து இதுவரை ஒன்பது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி முதல் இன்று காலை 6.00 மணிவரையான காலப் பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று பாணம பகுதியில் தேர்தல்கள் சட்டத்தை மீறும் வகையில் தென்னங் கன்றுகள் விநியோகிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, 600 தென்னங்கன்றுகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் இது குறித்து பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் தகவலளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.