வீடுகளின் மீது கல் எறியும் விஷமிகள் சி.சி.டி.வி கமராவில் அகப்பட்டனர்

ஹட்டன் - தும்புறுகிரிய வீதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு நள்ளிரவு 12.00 மணிக்குப் பின் சில விசமிகளால் கடந்த சில தினங்களாக கற்கள் எறியப்படுவதாகவும், இதனால் வீடுகளின் படலைகள் சேதமடைந்து வருவதாகவும், நள்ளிரவில் தமது நித்திரை களைவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் இன்று அதிகாலை ஒருவர் படலை ஒன்றின் மீது பாரிய கல்லை தூக்கி எறிவது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, இது குறித்து வீட்டு உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

அத்துடன், இரவு 12 மணிக்கு பின் இவ்வாறு சிலர் குழுவாக நடமாடுவது பல்வேறு சந்தேகங்களை தோற்றிவித்துள்ளதாகவும் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...