பொலிஸார் அசமந்தம் கைதிகள் இருவர் தப்பியோட்டம்சியம்பலாண்டுவ நீதிமன்ற வளாகத்தில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட கைதிகள் இருவரும் அழைக்கப்படும் வரை காத்திருக்க வைக்கப்பட்டிருந்தன. 

அப்போது, பொலிஸார் அசந்திருந்த நேரம் பார்த்து கைதிகள் இருவரும் தப்பியோடியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் பொலிஸார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.