றிசாதின் மஞ்சள் கவர் எங்களுக்கு எதற்கு? இறைவன் இருக்கிறான் - நிப்றாஸ்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

றிசாதின் மஞ்சள் கவர் எங்களுக்கு எதற்கு? இறைவன் இருக்கிறான் - நிப்றாஸ்!

Share This


என்னைப் பற்றி என்னைப் படைத்த இறைவனும் என்னை தெரிந்தவர்களும் நன்கறிவார்கள். பல தடைகளையும் தாண்டித்தான் இறைவன் எனது சமூகத்திற்கான ஊடகப் பணியை முன்கொண்டு செல்கின்றான்.
நான் செய்த உதவிகளை மறந்து -
எனது கட்டுரைகளை தடை செய்வதற்காக கூட்டம் போட்டவர்கள், போட்டுக் கொடுத்தவர்கள், பெருமளவு பணத்தையும் மூளையையும் செலவு செய்தவா்களையும் நான் அறிவேன். ஆனால், அதுபற்றி நான் ஒரு வசனம் கூட எழுதாது ஒரு சுயகட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றேன்.
ஆனால் இதை வசதியாக மறைத்து, நானும் சக ஊடகவியலாளா் சஹாப்தீனும் வேறு பலரும் இருக்கின்ற ஒரு போட்டோவை எடிட் செய்து போலி முகநூல் கணக்குகளின் ஊடாக இட்டுக்கட்டப்பட்ட விடயங்களை குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.
நாங்கள் பத்தி எழுத்தாளர்கள் என்ற வகையில் எல்லா அரசியல் தலைவர்களுடனும் உரையாடுகின்றோம், யாருடைய பிழைகளையும் சுட்டிக்காட்ட பயந்தது கிடையாது என்பதே நிதா்சனம் என்றிருந்தும் இப்படி திரிபுபடுத்தியிருக்கின்றார்கள்.
மேலும் எனது புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு போலிபேஸ்புக் கணக்கும் திறக்கப்பட்டுள்ளது.
நான் இதைவிடப் பெரிய பிரளயங்களை எல்லாம் அல்லாஹ்வின் உதவியால் கடந்து வந்திருக்கின்றேன். இதைச் செய்பவா்கள் யார், அதற்கான காரணம் என்ன என்பது பற்றி நானும் அறிவேன் நீங்களும் அறிவீர்கள்.
எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்
ஏ.எல். நிப்றாஸ் - ஊடகவியலாளர்

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE