உள்ளுராட்சித் தேர்தலுக்கு கூட்டு எதிரணியானது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைய முடிவு?கூட்டு எதிரணியானது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா? என்பது தொடர்பில் இன்று(6) இரவு தீர்மானிக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும்,நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையின் கீழ்  கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதேவேளை நேற்று(5) கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கிடையில் வி​சேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதனபோது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் முன்வைக்கப்படலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.