வடக்கு - கிழக்கு இணைக்கும், செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கின்றனர் - மகிந்த எச்சரிக்கை

ஹோமகமவில் நடந்த சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டம் ஒன்றில் மகிந்த ராஜபக்ஸ கூறியவை, “புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி இந்த நாட்டைத் துண்டாடும் சதித்திட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது.

வடக்கு - கிழக்கு இணைப்பு, அதியுச்ச அதிகாரங்கள் என அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நாடு பிளவுபட வேண்டுமா அல்லது இணைந்து செயற்பட வேண்டுமா என்பதை இந்த நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த நாடு பிளவுபடுவதை விரும்பாத அனைவரும், இம்முறை தேர்தலில் எம்முடன் கைகோருங்கள்.

நான் கடந்த அதிபர் தேர்தலில் தோற்கவில்லை, அனைத்துலக சக்திகளின் மூலமாக தோற்கடிக்கப்பட்டேன். இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் பயணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.