அக்கரைப்பற்றின் அடுத்தமேயர்கள் வட்டமடு விவசாயிகளை சந்தித்தனர்!முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் வால் மாத்திரம்தான் வட்டமடு விவசாயிகளுக்கு தீர்வு வழங்க முடியும் என தேசிய காங்கிரஸ் ஊடகப்பணிப்பாளர் அஸ்மி ஏ.கபூர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
வட்டமடு விவசாய பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த இருபத்தி ஒன்பது நாட்களாக வட்டமடு விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்ட களத்துக்கு தேசிய காங்கிரஸ் உயர் மட்ட குழு சென்றது,
வட்டமடு விவசாயிகள் தங்களுக்கு நேர்ந்த துயரங்களை எடுத்துரைத்ததுடன் அனைத்து அரசியல் வாதிகளும் கை கழுவி நடு வீதியில் விட்டதாகவும் ஆதங்கப்பட்டனர்.
திங்கள் கிழமை வட்டமடு விவசாய பிரதிநிதிகள்,முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் உடனான சந்திப்பு நிகழ உள்ள நிலையில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பிரதிநிதிகள் கருத்து கூறினர்.

விவசாயிகளை சந்திக்க சென்ற பஹீஜ், சபீஸ், அஸ்மி ஏ.கபூர், உவைஸ் ஆகியோரில் ஒருவரே தே.காவின் அக்கரைப்பற்றின் அடுத்த மேயர் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது,