மிக உன்னத ஜனாஸா (உண்மைச் சம்பவம்)
சுல்தான் முஹம்மத் அல் கானூனி ஒரு நாள் இரவு திடீரென தூக்கத்தில் இருந்து விழித்து எழும்பினார். தான் கண்ட கனவினால் பதற்றம் அடைந்தவராக தனக்கு நெருக்கமான காவலாளியை அழைத்து குதிரையை தயார்படுத்தும் படி வேண்டினார்.

குடி மக்களின் நிலைமைகளை அறிந்து வருவதற்கு நாம் வேறு தோற்றத்தில் இன்று செல்ல வேண்டும் என வேண்டினார். மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக மாறு வேடத்தில் செல்வது மன்னரின் வழக்கமான இருந்தது.

இப்படி மன்னரும் அவரது காவலாளியும் வெளியே சென்றனர். அப்போது இறந்த ஒரு மனிதரின் பிணம் பாதையில் கிடப்பதை கண்டார்கள். இது யாருடையது என வினவிய போது இது ஒரு விபச்சாரியின் பிணம். இவர் மது அருந்தக் கூடியவராக இருந்தார் எனக் கூறப்பட்டது.

அவரை அடக்கம் செய்ய அவருக்கு பிள்ளைகளும் இல்லை. மக்களும் இதை செய்யாமல் இருக்கிறார்கள். அவரது மனைவி மாத்திரமே உள்ளார் எனவும் கூறப்பட்டது.

அப்போது சுல்தான் இவர் முஹம்மத் (ஸல்) அவர்களது உம்மத்தை சார்ந்தவர் தானே என்று கூறிவிட்டு சுல்தான் அந்த ஜனாஸாவை தூக்கிக் கொண்டு ஜனாஸாவின் வீட்டுக்கு எடுத்து சென்றார்.

ஜனாஸாவை கண்டவுடன் மனைவி கடுமையாக அழ ஆரம்பித்தாள்.

இதையிட்டு சுல்தான் ஆச்சரியம் அடைந்தார். தனக்கு முன்னால் இருப்பவர் சுல்தான் என்பதை அவள் அறியவில்லை.

உனது கனவன் விபச்சாரம் மற்றும் மது அருந்தும் பாவங்களை செய்யக்கூடியவராக இருந்தாரே. அப்படி இருக்க ஏன் நீ அழ வேண்டும் என சுல்தான் கேட்டார்.

அதற்கு மனைவி கூறினாள் : 

அவர் சிறந்த ஒரு வணக்கவாளியாக இருந்தார். அவருக்கு பிள்ளைகள் இருக்கவில்லை . ஆனால் தனக்கு பிள்ளைகள் இருக்க வேண்டும் என அதிகம் ஆசைப்பட்டார்.

இதனால் மதுக் கடைக்கு சென்று, மது வாங்கி வீட்டுக்கு வந்து, அதை ஒரு தடாகத்தில் கொட்ட விட்டு அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் சில வாலிபர்களை இதனால் காப்பாற்றினார் என்று கூறுவார்.

அதேபோல் விபச்சாரிகளிடம் சென்று அவர்களுக்கு ஒருநாள் ஊதியத்தை கொடுத்து அவர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி விடுவார். அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் இதன் மூலம் சில வாலிபர்களை பாவங்களை விட்டும் காப்பாற்றினேன் என்று கூறுவார்.

அப்போது நான் அவருக்கு கூறுவேன், மக்கள் வெளிப்படையாக உள்ளவற்றை பார்த்து நீங்கள் மரணமடைந்த பின்னர் உங்கள் ஜனாஸாவை குளிப்பாட்டி அடக்கம் செய்ய வர மாட்டார்கள் .

அப்போது அவர் சிரித்தவராக கூறுவார் : 

எனது ஜனாஸாவில் சுல்தான் மற்றும் அமைச்சர்கள் உலமாக்கள் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.

இதனைக் கேட்ட சுல்தான் அழ ஆரம்பித்தார். நான்தான் அந்த சுல்தான். அவர் உண்மையான ஒருவர் என்று கூறினார்.

நான் அவரை குளிப்பாட்டி அடக்கம் செய்வேன் என சுல்தான் சொல்லி விட்டு தனது படைகளுக்கும் அனைத்து மக்களுக்கும் வருமாறு கட்டளையிட்டார்.

உண்மையில் பல்லாயிரம் மக்கள் ஒன்று திரண்டு இந்த ஜனாஸா உஸ்மானிய மன்னர்களின் மக்பராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஸூப்ஹானல்லாஹ். 

இஃலாஸ் எனும் பண்பு எவ்வளவு ஆழமாக இருந்திருக்கும் .

-Hoorulayn Leeza-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்