Dec 14, 2017

அமைதிக்கு தீ மூட்டிய அமெரிக்காகடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளில்; ஏற்பட்ட அமைதியின்மைக்கு திரைமறைவில் செயற்பட்டது உலக பொலிஸ்காரன் என அழைக்கப்படும் அமெரிக்காதான். ஈராக் மீதான படையெடுப்பு முதல் ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகர் எனப் பிரகடனப்படுத்தியது வரை மத்திய கிழக்கின் வரலாற்று நெடுங்கிலும் அமைதியின்மையை அமெரிக்கா வலிந்து உருவாக்கியிருக்கிறது என்பதை அரபுலகில்; இடம்பெற்று வருகின்ற வன்முறைகளையும் அவற்றின் அழிவுகளினதும்; பின்னணிகளைக் கொண்டு உணர்ந்து கொள்ள முடியும்.

உலகின் பல்வேறு பகுதிகளில் நாடுகளுக்கிடையே பகைமையை உருவாக்கி அமைதியைச் சீர்குலைத்து, விரோதத்தை வளர்ப்பதன் மூலம் தனது ஆயுத விற்பனையை பெருக்கிக் கொள்வது அமெரிக்கா முதலான ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கையாகவிருக்கிறது. இக்கொள்கையின் இலக்கை அடைந்துகொள்வதற்காக செயற்படும் அமெரிக்கா போன்ற நாடுகளின் கபடத்தனத்தை அரபுலகு இது வரை புரிந்துகொள்ளவில்லை.

நாடுகளுக்கிடையிலும், உள்நாட்டிலும், பிராந்தியங்களுக்கிடையிலும் விரோதங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தமது ஆயுத விற்பனையை மேற்கொண்டு; உற்பத்தியையும், பொருளாதாரத்தையும் விருத்தி செய்துகொண்டிருக்கும் அமெரிக்காவினால் காலத்திற்குக் காலம் அரபுலக நாடுகளின் அமைதிக்கு தீ மூட்டப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அமெரிக்காவின் ஆயுத விற்பனையும் மத்திய கிழக்கு நாடுகளும்;
2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆயுத விற்பனை அதிகரித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் குறிப்பிடுகிறது. இக்காலப்பகுதிக்கு முந்திய 5 ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் ஆயுத விற்பனை அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில்,; கடந்த 4 ஆண்டுகளில் ஆயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. உலகளவில் இடம்பெறுகின்ற மொத்த ஆயுத விற்பனையில் 31 வீதம் அமெரிக்க ஆயுதங்கள் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. அமெரிக்க மேற்கொள்ளும் ஆயுத விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்கப்படுகிறது. உலகளவில் இந்தியாவுக்கு அடுத்ததாக உலகில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக சவூதி அரேபியாவுள்ளமை அந்த மண்ணுக்கே அவகௌரவமாகும்.

இவ்வுலகிற்கு சமாதானத்தையும், சகவாழ்வையும் அறிமுகப்படுத்திய இஸ்லாம் வளர்ந்த மண்ணில் ஏகாதிபத்தியவாதிகளின் நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்தும் நாடாக புனித கவ்பாவைச் சுமந்த சவுதி மாறி வருகின்றது. ஏகாதிபத்தியவாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சவுதி மன்னர் பரம்பரை மதிமயங்கிவிட்டது என்பதை புலம்படுத்தும் வகையில் இஸ்லாம் அனுமதிக்காத பலவற்றுக்கு சுதந்திரம் வழங்க சவூதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதைச் சுட்டிக்காட்டலாம்.

இஸ்லாமிய ஷரியா சட்டத்திட்டங்களை அமுல்படுத்தும் சவூதி அரேபியா தற்போது இளவரசர் முகம்மது பின் சல்மானின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் இஸ்லாத்திற்கு முரணான கலாசாரங்களுக்கு அனுமதி வழங்க ஆரம்பித்திருக்கிறது. அதில் ஒன்றாகவே 37 வருடங்கலாக வணிய ரீதியாகத் தடை செய்யப்பட்டிருந்;த சினிமா திரைப்படங்களை மீண்டும் அடுத்த வருடம் தொடங்டக எடுத்திருக்கும் முயற்சியாகும். இவ்வாறான முயற்சியானது ஏகாதிபத்திவாதிகளின் ஆடுகளமாக சவூதி அரேபியாக மாறி வருகிறது. 

இதனொரு முன்னொடி நடவடிக்கையாகவே இளவரசர் முகம்மது பின் சல்மானின் 2030 விஷன் திட்டத்தின் கீழ் பல அதிரடி மாற்றங்கள் அரச நிர்வாகத்தில் இடம்பெற்று வருவதைச் சுட்டிக்காட்;டலாம்;.
இந்நிலையில்தான், அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நாடுகள் வரிசையில் சவூதி அரேபியா முதலிடம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் 33.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு சவூதியினால் அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேர தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஈரான் பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்து வைத்திருக்கிறது. அவை அயல் நாடுகளுக்கு பெரும் ஆபத்து என சவூதி உட்பட ஈரான் எதிர்ப்பு அரபுலக நாடுகளை நம்ப வைத்து தனது நாட்டில் பெருமளவில் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை இந்நாடுகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை மிக வெற்றிகரமாக அமெரிக்க முன்னெடுத்து வருவகிறது. இதனை மத்திய கிழக்கு நாடுகளான கட்டார் மற்றும் சவூதி அரேபிய உள்ளிட்ட நாடுகள் கொள்வனவு செய்யும் ஆயுதங்களைக் கொண்டு சமகாலத்தில் மதிப்பிட்டுக்கொள்ள முடியும்.

மத்திய கிழக்கில் இயங்கும் பல்வேறு கிளர்ச்சிக்குழுக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுதங்களை விற்பனை செய்தும் ஆயுங்களை வழங்கியும் முஸ்லிம்களை முஸ்லிம்களோடு மோதவிட்டு இன அழிப்புச் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் திட்ட வரிசையில் ஒன்றாக சிறிது காலம் அமைதியாக இருந்த பலஸ்தீன் மண்ணில் மீண்டும் இஸ்ரேல் மூலம் இன அழிப்புச் செய்யும் நடவடிக்கைக்கு உந்து சக்தி வழங்கப்பட்டிருக்கிறது அந்த உந்து சக்தியின் ஒரு வெளிப்பாடே ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக கடந்த 6ஆம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் விடுவிக்கப்பட்ட அறிவிப்பாகும்.

அமெரிக்காவின் அறிவிப்பும் அதிர்வலைகளும்
வரலாற்றுப் புனிதமிக்க மஸ்ஜிதுல் அக்ஸாவைச் சுமந்துள்ள ஜெரூசலத்தை வந்தேறு குடிகளான இஸ்;லேரலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரகடனப்படுத்திய நாள் முதல் இன்று வரை அதற்கான அதிர்வலைகள் உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

டிரம்பின் ஒருதலைப்பட்சமான இந்த அறிவிப்புக்கு துருக்கியின் ஜனாதிபதி ரிசப் தையிப் எதுர்வான் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார். உலக முஸ்லிம்களின் உணர்வைத் தூண்டிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப் உலக நாடுகள் பலவற்றின் தலைவர்களதும் அமைப்புக்களினதும் பலத்த கண்டணக் குரல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் அமைதி முயற்சியில் பல தசாப்தங்களாக அமெரிக்கா கடைபிடித்து வந்த நடுநிலை டிரம்பின் அறிவிப்பால் தலைகீழாக மாறியுள்ளது. மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தும் தூதுவராக அமெரிக்காவை நம்பியிருக்க முடியாது என அரபு நாடுகளின் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் கூறியுள்ளனர். அத்துடன் ஜெரூசலம் விகவாரத்தில் பல தசாப்த காலமாக அமெரிக்க கொண்டிருந்த கொள்கையில் டொனால் டிரம்ப் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதனால் பலஸ்தீனத்திற்கான உரிய தீர்வைக் காணும் நடவடிக்கைக்கு அனுசரணை வழங்கும் உரிமை இனியும் அமெரிக்காவிற்கு கிடையாது என பலஸ்தீன் கூறியுள்ளது.

1995 முதல் இஸ்ரேல் பலஸ்தீன் இரு தரப்புக்குமிடையேயான சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அனுசரணை வழங்கி வந்த அமெரிக்கவே இப்போது இப்பிரச்சினையை விஸ்வரூபமெடுகச் செய்துவிட்டது. டிரம்பின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த அமைதியை சீர்குலைத்திருப்பதாக பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கண்;டனம் தெரிவித்து வரும் நிலையில் இவ்வறிவுப்புக்கெதிரான அதிர்வலைகள்; உலக நாடுகளில் வலுப்பெற்று வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரமின்றி, ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளிலும் எதிர்ப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்டு வருகின்றனர். வீதிகளில் இறங்கி இச்சர்ச்சைக்குறிய முடிவை மீளப்பெற வேண்டும் என கோஷமெழுப்பி வருகின்றனர். உலகளவில் பலத்த கண்டணத்தை உருவாக்கியுள்ள அமெரிக்காவின் இவ்வறிப்பானது ஒரு சில மாதங்களே அமைதி நிலவிய பலஸ்தீன் மண்ணில் மீண்டும் இஸ்ரேலியரின் மனித வேட்டைக்கு வித்திட்டுள்ளது.

இவ்வறிப்பு வெளியான நாள் முதல் பலஸ்தீனத்தில் தொடர் ஆர்;ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஞாயிறன்று இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மேற்குக் கரை, ஜெரூசலம் மற்றும் காசா பிரதேசங்களில் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இஸ்ரேலிய படையினருக்குமிடையே இடம்பெற்ற மோதல்களில் 157 பேர் காயமடைந்தாக பலஸ்தீன செம்பிறைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் காசாவில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல பலஸ்தீன சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கலத்திற்குக் காலம் பலஸ்தீனர்களை அறுவடை செய்வதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்துவதற்கு இஸ்ரேல் தயங்கியதில்லை என்பதை பலஸ்தீன மண் கபளீகரம் செய்யப்பட்ட நாள் முதல் காண முடிகிறது.

இஸ்ரேலின் அராஜகமும் பலஸ்தீனர்களும்
1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி அமெரிக்க மற்றும் பிரித்தானிய வல்லரசுகளின் அழுத்தங்களின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையினால் சட்ட விரோதமாக அரபு மண்ணில் ஸ்தாபிக்கப்பட்ட இ;ஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் நெருக்குவாரங்கள்; வரலாற்று நெடுங்கிலும் பலஸ்தீன மண் மீதும் மக்கள்; மீதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

பலஸ்தீன் மீதான ஆக்கிரப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு தொடங்கிய 1948ம் ஆண்டு முதல் இற்றை வரையான 69 வருட காலப்பகுதியில் பல்லாயிரக்காணக்கான இன்னுயிர்களின் உதிரங்களினால் பலஸ்;தீன மண் செந்நிறமாக்கப்பட்டிருக்கிறது. கோடானகோடி சொத்தழிவுகளை அம் மண் கண்டிருக்கிறது.

1948 முதல் 1949 வரையான ஒரு வருட காலப் பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடி, அட்டூழிய, அராஜகத் தாக்குதல்; நடவடிக்கைகளி;ன் காரணமாக பலஸ்தீனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உயிர் இழந்தும், 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்; காயமடைந்துமள்ளனர்;. இவ்வாறு உயிர் இழந்த, காயப்பட்டவர்களில் அதிகமானோர் சிறுவர்களாவர் இந்நிலையில்தான், ஜேர்த்தானினாலும் எகிப்தினாலும் ஆளப்பட்ட பஸ்தீனத்தின் மேற்குக்கரையும் காஸாவும் இணைந்ததாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி அரபு லீக்கினால் பலஸ்தீன் அரசாங்கம் பிரகடனப்படுத்தப்பட்டது. அரபு தேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல,; 69 வருட காலப் பகுதியில் 275 தடவை பலஸ்தீன் மீது தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

பலஸ்தீன மண்ணில் வாழும் பலஸ்தீனர்களையும், இஸ்லாமிய அடையாளங்களையும் அழித்துவிட்டு முழு பலஸ்தீன மண்ணையும் கபளிகரம் செய்ய முயற்சிக்கும் இஸ்ரேல், போராட்ட வரலாறுகளை மறந்து செயற்படுகிறது. தேச விடுதலைக்காக போராடுகி;ன்றவர்களை அடியோடு அழித்த வரலாறு இந்ந பூமியில் இல்லை. விடுதலைக்காகப் போராடும் இனத்தின் ஒரு உயிர் வாழும் வரை இன அழிப்பாளர்களுக்கெதிரான போராட்டம் தொடரத்தான் செய்யும்.

பலஸ்தீனத்தின் எதிர்கால சந்ததிகளான சிறுவர்களையும், இளைஞர்களையும் அறுவடை செய்துவிட்டு பலஸ்தீனத்தைக் கபளிகரம் செய்ய நினைக்கும் இஸ்ரேலும் அதற்கு துனைநிற்கும் அமெரிக்க போன்ற ஏகாதிபத்திய நாடுகளும் வரலாற்றுப் பாடங்களை கற்றுக்கொள்வதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை.

1948ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டிலும் அல்லது ஆண்டு விட்டு ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின்போது 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 6000க்கும் மேற்பட்டடோர் காயமுமடைந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 200 பேர் சிறுவர்களாகவும் காயப்பட்டவர்களிலும் அதிகளவிலானோர் சிறுவர்களாகவுமே இருந்தனர். 

ஒவ்வொரு வருடத்திலும் இஸ்ரேலினால் பலஸ்தீன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது உயிர் இழந்தவர்களின், காயப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீதத்தினர் சிறுவர்கள்தான். இவ்வாறு சிறுவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களின் பின்னணியில் ; பலஸ்தீன எதிர்கால சந்ததியினர்களான சிறுவர்களை அழிக்கும் இஸ்ரேலின் சதித்திட்டம் புலப்படுகிறது.

அரேபிய முஸ்லிம்களின் அமைதிப்பூங்காவாக விளங்கிய பலஸ்தீனத் தேசத்தில் பலாத்காரமாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல், பலஸ்தீன் மீது தொடர்சியாக அழுத்தங்களை பல்வேறு வழிகளிலும் மேற்கொண்டு வந்தது. இதனால் பலஸ்தீன மக்களின் தொழில், கல்வி, பொருளாதார, சுகாதார, வாழ்வாதார நடவடிக்கைகள் யாவும் முடக்கப்;பட்டுள்ளன. சொந்தமண்ணிலேயே நாடற்றவர்களாக பலஸ்தின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இஸ்ரேலின் நிலப்பரப்பிலிருந்து காஸாவுக்குக் கிடைக்கின்ற மனிதாபிமான அடிப்படைத் தேவையாகிய நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் என்பவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் படிப்படியாகக் குறைத்து வந்துள்ளது. இதனால் பலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

2007ஆம் ஆண்டில் காஸாவில் 95 வீதமான தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. 3,900 தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த 35ஆயிரம் பலஸ்தீனிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் காஸாவில் 40க்கும் 80க்கும் இடைப்பட்ட வீதத்தினர் தொழிலற்றவர்களாகக் காணப்பட்டனர். அத்Nதூடு காசாவிலும், மேற்குக்கரையிலும் நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு சட்டவிரோத குடியிருப்புக்களை தொடர்ச்சியாக இஸ்ரேல் இன்று வரை முன்னெடுத்து வருகிறது.

இஸ்ரேலின் நெருக்குவாரங்களும், அட்டூழியங்களும்,; தாக்குதல்களும் தரை, கடல், வான் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1967முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 1987ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இஸ்ரேலியர்களினால் கொல்லப்பட்டவர்களின்; எண்ணிக்கை 7,978 ஆகும். இதில் 1,620 பேர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள்.

2007ஆம் ஆண்டில் பலஸ்தீன சனத்தொகையில 17 வீதத்தினர் 5 வயதுக்குக் குறைந்தவர்கள.; 46 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்கள். காஸாவின்; 1.7 மில்லியன் சனத்தொகையில் 8 இலட்சம் பேர் சிறுவர்களாவர். எதிர்கால பலஸ்தீன சந்ததிகளின் வளர்ச்சி, அதிகரிப்பு இஸ்ரேலுக்கு பெரிய சவாலாகவே உள்ளது. அதனால் பாடசாலைகளையும், பாடசாலை செல்லும் மாணவர்களின் பஸ்களையும் விளையாட்டு மைதானத்தில் விளையாடும் சிறுவர்களையும் தமது கொடூர தாக்குதல்களின் ஊடாக கொண்டழித்து வருகிறது இஸ்ரேல் என்பதை மறுக்க முடியாது.

ஐ.நா.ச. அறிக்கையும் பலஸ்தீன் சிறார்களும்
ஐ.நா.வின் சிறுவர்களுக்கான அமைப்பின் தகவல்களின் பிரகாரம். 2013ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஒரு தசாப்த காலப் பகுதிக்குள் 12 வயதுக்கு குறைவான 7,000 பலஸ்தீனச் சிறுவர்கள் இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 12 முதல் 17 வயதுக்குட்ட 7,000 சிறுவர்கள் இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யபபடுவதாக சர்வதேச ஆய்வறிக்கைகள்; சுட்டிக்காட்டுகின்றன.

சர்வதேச சிறுவர் உரிமைகளுக்கான சட்டங்களையும் மீறி கைது செய்யப்பட்ட சிறுவர்களுக்கெதிராக போலிக் குற்றச்சாற்றுக்களைச் சுமத்தி நீதி மன்றங்களினால் தீர்ப்புகளையும் இஸ்ரேலிய இரும்பு இதயம் கொண்ட இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது.

கைது செய்வதும,; கொண்டழிப்பதும் என சிறுவர்களை இழக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலஸ்தீன எதிர்கால சந்ததி அந்த மண்ணில் வாழக்கூடாது என்ற இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவாகப் புலப்படுத்துகின்றது. சிறுவர்கள் உலகில் மிகவும் பாதுகாப்பாக வாழ்வதற்காக ஐ,நா.வினால் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் பட்டயத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களும் சிறுவர் உரிமைகளை மீறுவோறுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் எந்தளவு தூரத்தில் பலஸ்தீன சிறுவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பிலும் கைது செய்யப்படுவது தொடர்பிலும் கொல்லப்படுவது தொடர்பிலும் செயற்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறியதாகும்.

இஸ்ரேலின் அக்கிரமங்களினால் பலஸ்தீனத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சிறுவர்களை வாழ விடாது அவர்களை வளர விடாது அழிப்பதன்; பின்னணி என்ன? என்பதற்கான விடையினை மிக வெளிப்படையாகவே இஸ்ரேலிய ஆட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் கடந்த காலங்களில்; இஸ்ரேலிய ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக இஸ்ரேலிய படையினருக்கும் பலஸ்தீன மக்களுக்குமிடையே இடம்பெற்று வரும் மோதல்கள் மற்றும் வன்முறைகளிலிருந்தும்; சிறிது காலம் பலஸ்தீன மண்ணில் நிலவிய அமைதி தற்பொது சீர்குலைந்துள்ளது. இதனால், பலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த அமைதிக்கும் தீ மூட்டியது அமெரிக்கா என்று கூறுவதில் தவறிருக்காது.

உலக அமைதியும் அமெரிக்காவின் மாறுவேடமும்
உலகில் அமைதி நிலவ வேண்டும். மனித குலம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக சர்வ தேச அரங்கில் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான தரகராகவும் சில சந்தர்பங்களில் அமெரிக்கா செயற்பட்டிருக்கிறது. அமைதியை உலகளில் ஏற்படுத்தும் நோக்குடன் அமைதிக்கான தினம் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டு யுத்தம் மூழ்குவதைத் தவிர்க்கும் விதத்திலும் ஐக்கிய நாடுகள்; சபையினால் 1981ஆம் ஆண்டு முதல் வருடம் தோரும் செம்டம்பர் மாதம் சர்வதேச அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் வன்முறை அதிகரிப்பதைத் தவிர்த்து அமைதி நிலவ ஒவ்வொருவரும் உதவி வேண்டும் என வருடாவருடம் அனுஷ்டிக்கப்படும் இத்தினம் ;வலியுறுத்துகின்றபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்பின் அறிவிப்புடன் மறுதலையாகி மீண்டும் பலஸ்தீன மண்ணின் அமைதி சீர்குலைந்து வன்முறைகளுக்கு தீ மூட்டப்பட்டிருக்கிறது என்பதே நிஜமாகும்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network