மறிச்சுக்கட்டி உட்பட முஸ்லிம்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை - பஹத் ஏ.மஜீத்!மன்னார் மறிச்சுக்ட்டி உட்பட நாட்டில் நாலாபுறங்களிலுமுள்ள சுவீகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் மீள வழங்கப்படாமை முஸ்லிம்களுக்கு விடிவினை வழங்குமா இந்த ஆட்சி என சிந்திக்க வைத்துள்ளதாக தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கத்தின் தலைமை செயற்பாட்டாளர் பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

இன்று  குளோபல் ஊடக இல்லத்தில் இடம்பெற்ற தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசிய இயக்கத்தின் வாராந்த ஊடக சந்திப்பியே இதனை தெரிவித்தார், மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர்,

வட்டமடு விவசாய காணி, நுரைச்சோலை வீட்டுதிட்டம், மன்னார் மறி்ச்சுக்கட்டி மக்களின் காணிகள், ஹலால் சான்றிதழின் தனியார் மயமாக்கம், தம்புள்ள பள்ளிவாசல் காணி உள்ளிட்ட பல பள்ளிவாசல்களின் காணி பிரச்சினைகள், திருகோணமலை முஸ்லிம்களின் காணிகள், அஸ்ரப் நகர் மக்களின் பிரச்சினை, மாயக்கல்லி சிலைவைப்பு, கிந்தோட்டை மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமை, வடபுல முஸ்லிம்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினை, முஸ்லிம்களின் வியாபார சிக்கல்கள், இப்படி அடுக்கடுக்காய் பல எண்ணிலடங்கா பிரச்சினைகள் உள்ள நிலையில் அரசு ஒரு தேர்தலை நடாத்துவதை பார்க்கையில் மிகவும் கவலைக்குரியதாய் இருக்கிறது.

இந்த பிரச்சினைகளை தீர்க் முடியதாய் இருக்கிற போதும் இதனை அரசு செய்ய எத்தனிக்கை செய்கின்ற போது முஸ்லிம் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பிரச்சினை பட்டு மூட்டிவிட்டு அரசியல் செய்து எதையுமே செய்ய விடுவதில்லை. இதனை பாமர மக்கள் புரிந்து கொள்வதில்லை, ஒரு பிரதேசமே முடங்கி அப்பிரதேச பொது மக்கள் எங்கள் முஸ்லிம் உறவுகள் வீதிக்கிறங்கி உரிமையை கேட்டதுதான் சாய்ந்தமருது பிரதேச சபை ஆனால் இன்றுவரை யாரும் அதனை செய்துகொடுக்கவில்லை கேட்டால் அவர் தடுத்தார் இவர் தடுத்தார் என தப்பித்து கொள்கின்றனர். இவற்றை நாம் எவ்வாறு கருதிக்கொள்வது? என கேள்வியெழுப்பியுள்ளார்.

நடைபெறும் வட்டார முறை தேர்தல் முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளையும், அரசியலையும் முடக்கும் அப்பட்டமான செயல் ஆனால் அப்படியான தேர்தலுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள தலைமைகளை என்னவென்று சொல்வது? அது மாத்திரமின்றி முஸ்லிம் கட்சிகள் கொள்கைகள் தவறி ஒரு பிரதேசத்தில் தனி்ச்சின்னத்திலும், பிற இடத்தில் தேசிய கட்சிகளின் சின்னத்திலும் கேட்டு சின்னாபின்னமாகியுள்ளனர் இதுவும் அரசியல் வறுமைதான், இப்படி பார்க்கையில் அடுத்துவரும் இதர தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகளின் சின்னத்தையே முஸ்லிம்கள் மறந்துவிடுவர் இதுவே இலக்கு இறுதியில் சிறு கட்சிகள் அழிந்துபோய் தேசிய கட்சிகள் மாத்திரமே இருக்கும்  அப்படியெனில் எதற்கு கட்சிகள்? தேசியக் கட்சியில் முக்கிய பதவியில் இருக்கலாமே? இப்படி ஆயிரம் கேள்விகளை எங்கள் முஸ்லிம் மக்கள் தாங்கியுள்ளனர்.

எது எவ்வாற இருப்பினும் தேர்தல் ஒன்றை நாம் எதிர்நோக்கியுள்ளோம், இந்த தேர்தலில் சிறந்தவர்களுக்கு உங்கள் அமானித வாக்குகளை வழங்கி சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி முஸ்லிம்களின் தனித்து அடையாளத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...