சவுதியை நோக்கி யெமனிலிருந்து ஏவுகணைத் தாக்குதல்


சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், சவுதிஅரேபியா அதனை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
யெமனிலுள்ள ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமது இலக்கு அரச நீதிமன்றமான மாளிகையான அல் யமாமா மாளிகையாகும் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணை ஏவப்படும் வேளையில் சவுதி தலைவர்கள் அந்த மாளிகையில் ஒன்றுகூட தயாராகியிருந்ததாகவும் இதனை இலக்கு வைத்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், சவுதி அரேபியா இது தொடர்பில் எதுவும் தகவல்களை வெளியிடவில்லை.
இச்சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சவுதிஆரேபியா எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லையெனவும் கூறப்படுகின்றது.