அதாஉல்லா காலத்திற்கேற்ற தலைவன்; முஸ்லிம் பிரஜைகள் இயக்கம் பரிந்துரைமுன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா காலத்திற்கேற்ற ஒரு தலைவர் என முஸ்லிம் பிரஜைகள் இயக்கம் தெரிவித்துள்ளது, இலங்கை முஸ்லிம்களின் எதிர்கால சிந்தனையுள்ள அதாஉல்லா போன்ற ஆளுமைகளின் தேவை தற்பொழுது உணரப்பட்டுள்ளது,

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைதுாக்கிய காலத்தில் அவர்களுக்கு எதிராக குரல்கொடுத்த தலைவர் அவர், ஆனால் இன்று முஸ்லிம்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் வந்தபோதும் வாய்மூடி மௌனிகளாக இருக்கும் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் குறித்து சிந்திக்கையில் மிகவும் கவலையாக இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு அடுக்கடுக்காய் ஆயிரம் சிக்கல்கள் வந்தபொழுது தங்கள் சுய இலாபம், சொகுசு வாழ்க்கை என்பதை மட்டும் கவனத்தில் எடுக்கும் இன்றைய அரசியல் வியாபரிகள் மத்தியில் அன்றைய அதாஉல்லா எவ்வளவு மேலானவர்.

இலங்கை முஸ்லிம்களுக்கு தலைமைத்தும் வகிக்க அதாஉல்லாவால் முடியும், அரசியல்தாண்டி எதிர்கால சிற்தனையுள்ள அதாஉல்லா தலைமையேற்க வேண்டும்.