மக்களின் கண்ணீரைத் துடைக்கும் அரசியல்வாதிகளையே தேர்ந்து எடுக்க வேண்டும்நீண்ட காலமாக நாட்டுக்கு தேவையான தூய்மையான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு எதிர்வரும் தேர்தல் முக்கிய கட்டம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அதிகாரத்தைப் பெற்று தமது சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்ளும் அரசியல்வாதிகளாக தவிர்த்து, மக்களின் கண்ணீரைத் துடைக்கும் அரசியல்வாதிகளையே அடுத்த தேர்தலின் மூலம் நாட்டுக்கு வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பிரதான தடையாக அமைந்துள்ளது, பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல், மோசடிக்கு உட்பட்டிருப்பதாகும்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நேர்மையான தூய்மையான அரசியல் கட்சியாக கட்டியெழுப்புவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.