திடீரென பற்றி எரிந்த உந்துருளியால் இளைஞர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்புயாழ்ப்பாணம் - அராலி கொட்டைக்காடு பகுதியில் ஓடிக்கொண்டிருந்த உந்துருளி திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதனை செலுத்திய இளைஞர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த இளைஞர் உந்துருளியில் பயணித்த வேளை, உந்துருளி விபத்திற்கு உள்ளான பின்னர் அது தீப்பிடித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது அதனை செலுத்தி இளைஞர் உடல் கருகி பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 25 வயதான இளைஞர் ஒருவர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.