அலவியா தாய்க்கு இன்று கன்னிப் பிரசவம்.; அல்ஹம்துலில்லாஹ்..க.பொ.த. (உ /த) பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்த மாணவர்களின் பெயர்கள் மற்றும் பாடசாலைகளின் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கையில் உள்ளூர மகிழ்ச்சியொன்று பீரிடுவதை தவிர்க்க இயலவில்லை...

இந்த ஆனந்தக் குதூகலத்தில் முதன் முறையாக எனது அலவியா அன்னையும் கூடவே இணைந்து கொள்கிறாள்...

இயற்கை எழில் கொஞ்சும் எலுவிலை கிராமத்தின் மத்தியில் அழகான சூழலில் அமைந்துள்ள பாடசாலையே அலவியா மு.ம.வித்தியாலயமாகும்.சீகிரியக் குன்றின் மீதிருந்து அதன் பகுதிகளை காசியப்ப மன்னன் ஆட்சி செய்ததது போல உயர்ந்த  மேட்டின் முகட்டிலமர்ந்து அமைதியாக எலுவிலையை ஆள்கிறாள் அலவியாத்  தாய்...

தற்போது வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளின் படி எமது பாடசாலையிலிருந்து தோற்றிய 08 மாணவர்களில் 03 மாணவிகள் 3 A சித்திகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கான அனுமதி பெற்றுள்ளனர் என்பதோடு 02 மாணவிகள் A2B
சித்திகளையும் பெற்றுள்ளனர்....

M.Z.F. ZUMANA - 3A( P.Science, Geography, I.civilization)
M.Z.F. ZUMLA -  3A. ( P.Science, Geography, I.civilization)
M.S.SHAHEEKA - 3A. ( P.Science, Geography, I.civilization)
M.N.F.FARHANA- A2B (P.Science,Geography, I.Civilization )
M.S.S.IMLA      - A2B. (I.Civilization, P.Science,Geography)

அலவியா பாடசாலை மாணவர்களின் இச்சாதனைக்குப் பின் மறைக்கப்பட்ட உண்மைகள் இருக்கின்றன. கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட மற்றும் ஏற்படுத்தப்பட்ட கஷ்டங்கள் சொல்லியடங்காதவை....

தரம் 11 வரையிலேயே தனது பிள்ளைகளை பராமரிக்க முடிந்த  அலவியாக்கு நீங்காத வலியொன்று நீண்டகாலம் புரையோடிப் போய் இருந்தது.அன்னையின் உள்ளத்தினின்றும் ஆறாக்காயத்திற்கு மருந்து போடும் தருணத்தை இறைவன் கிட்டிய தூரத்திலே வைத்திருந்தான். ஆம் 2015 ஆண்டு ஏப்ரலில் ஒரு புதுவித உணர்வு, மாறுபட்ட மனமாற்றம், புத்துணர்ச்சியின் இடமாற்றம் அலவியா அன்னை (A/L) கலைப்பிரிவு என்ற கர்ப்பம் தரித்தாள்...

அலவியாவின் முதல் வித்துக்களாக பாடசாலையின் முதல் சொத்துக்களாக 08 மாணவர்கள் அவதரித்தார்கள்.தாயின் கர்ப்பம் ஊருக்கு புகழூட்டினாலும் அவள் உள்ளத்திற்கு மகிழ்வூட்டவில்லை.வழக்கத்திற்கு மாறுதலான ஒன்றைச் செய்யும் போது  கேலிப்பேச்சுக்கள் வருவது எமது சமூகத்தின் பழக்கமாகிவிட்டது. அனுபவமற்ற உயர்தரம், பழியாகும் மாணவர்கள், அனுபவமற்ற ஆசிரியர்கள் என பலவாறான ஏச்சுக்கள், கல் வீச்சுக்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன.

எதிரிகளும் எதிர்ப்புக்களும்  நெறுக்குவாரப்படுத்தும் போது சாக்ரடீஸ் தனது போதனையை நிறுத்தியிருந்தால் பிளேட்டோ, அரிஸ்டோட்டில் என்ற மா மேதைகளை உலகம் இழந்திருக்குமே என்று எம் உள்ளத்தை உற்சாகப்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தோம்...

இரண்டு வருடங்கள் இறைவன் கருணையால் மேற்கொண்ட கடும் பிரயத்தனங்களுக்கு இன்று  மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளன.

எது எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும் இம் மாணவிகள் அலவியாவின் கன்னிப் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற நாமத்தின் உரித்தாளர்களாக தடம் பதிக்கிறார்கள்...

ஒன்றை முறியடிக்கும் இன்னொன்று சாதனை என்று பொருள்படும். ஒன்றை  நெடுங்காலம் நிலைபெறச் செய்வது வரலாறு என்று மாறுபடும்.அலவியாவின் ஏட்டில் இவர்கள் வரலாற்றுச் சாதனையாளர்களாக செதுக்கப்பட்டிருக்கிறார்கள்....

இம் மாணவிகள் பல்கலைக்கழகம் நுழைவதற்கு  பாரிய முயற்சி எடுத்த முன்னாள் அதிபர் M.S.M.சல்மான் அவர்களுக்கும் குறுகிய காலம் அதிபராக இருந்து ஆலோசனை வழங்கிய  A.R.ரம்சி அவர்களுக்கும் உளவள ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்கிய S.H.  தாலிப் அவர்களுக்கும் மேலும் இம்மாணவர்களை ஆற்றுப்படுத்த என்னோடு (அரசியல் விஞ்ஞானம்) கை கோர்த்து நித்தமும் ஓயாது மனமுவந்து கற்பித்த  ஆசிரியர் M.U.M. நௌபீஸ் (இஸ்லாமிய நாகரீகம்) ஆசிரியை அஸ்மியா ரஜூன்(புவியியல்) அவர்களுக்கும் மற்றும் இமமாணவிகளுக்கு  உடலாலும் உழைப்பாலும் உள்ளத்தாலும் உதவிய அத்தனை பேருக்கும்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

எம் நுஸ்ஸாக்