முஸ்லிம்கள் ஒரு வீதமும் இல்லை! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

முஸ்லிம்கள் ஒரு வீதமும் இல்லை!

Share This

கடந்த 10 வருட காலத்துக்குள் சிங்கள மற்றும் தமிழ் பெண்களில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் எல்.ஆர்.டி. (கருத்தடை) இற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுபல சேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை சாட்சியுடன் நிரூபிக்க முடியுமாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 75 சதவீதமான சிங்களப் பெண்கள் கருத்தடை செய்துகொண்டுள்ளதாகவும் முஸ்லிம் பெண்களில் ஒரு சதவீதமேனும் இந்தக் கருத்தடை செய்யாதவர்களாக உள்ளனர் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் சிங்கள பெண்கள் மாத்திரமின்றி சிங்கள ஆண்கள் கூட ஆண்மை இழக்கும் நிலைக்கு மாற்றப்படுவதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நடவடிக்கையை அரச சார்பற்ற நிறுவனங்கள் சில மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சிலரின் அங்கீகாரமும் கிடைப்பதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 10 வருடங்களில் இந்த நடவடிக்கைக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் சுமார் 900 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான நிதியை செலவிட்டுள்ளதாகவும் தேரர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு எல்.ஆர்.டி. செய்து கொள்ளும் ஒரு சிங்கள பெண்ணுக்கு 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதாகவும் தேரர் இன்றைய சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE