வேட்பாளர்களுடன் வீதி அபிவிருத்தி செய்யும் அக்கரைப்பற்று ஆணையாளர்


சிலோன் முஸ்லிம் அக்கரைப்பற்று செய்தியார் இர்சாத்

அம்பாரை மாவட்டத்திற்குட்ட அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குள் பல வீதிகள் மழைகாலம் என்பதனால் நீர் நிரம்பி சேறாகவும் மடுவாகவும் பயணிக்க முடியாமல் காணப்பட்ட வீதிகளை அப்பிராந்திய மக்களால் முறையிடப்பட்டும் கண்டும் காணாமலும் இருந்த மாநகர ஆணையாளர் திடீரென அப்பபிராந்தியத்தில் காணப்படும் வீதிகளுக்கு அவ்வட்டாரத்தில் தேர்தலில் போட்டியிடும் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர்களை அழைத்து அவர்களுடன் சேர்ந்து கிரசர் தூள் போடுவதாக தேர்தல் ஆணையாளரிடமும், தேர்தல் கண்காணிப்புக்குழுவிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அக்கரைப்பற்று மாநகர சபைத்தேர்தலில் போட்டி இடுகின்ற வேட்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தொடந்து இதேவேலையினை அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் செய்து வருவதாகவும் இதனை தொடர்ந்து அனுமதிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.
வேட்பாளர்களுடன் வீதி அபிவிருத்தி செய்யும் அக்கரைப்பற்று ஆணையாளர் வேட்பாளர்களுடன் வீதி அபிவிருத்தி செய்யும் அக்கரைப்பற்று ஆணையாளர் Reviewed by NEWS on December 31, 2017 Rating: 5