ஊடகங்கள் பக்கசார்பற்ற வகையிலும், நீதியான முறையிலும் செயற்படவேண்டும்


உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்தச் சகல தரப்புகளும் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களின் பொறுப்பு குறித்துத் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக வழிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் , ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தச் செயலமர்வில் உரையாற்றுகையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
தொழிநுட்ப மற்றும் நவீன உலகில் பொது ஊடகங்களை நிர்வகிக்க முடியாது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்களில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இவை உண்மைக்கு புறம்பானதாகவிருந்த போதிலும் 30 செக்கனுக்கு உட்பட்ட தொலைக்காட்சி காணொளியாக இருந்த போதிலும் பொது மக்கள் இதனை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வர்.பொதுமக்கள் தொடர்ந்தும் ஊடகங்களை நம்புகின்றனர்.
ஊடகங்களுக்கு ஒழுக்க விதிமுறை இருக்குமாயின் ஊடக வழிகாட்டல் தேவையற்றது. தேர்தலின் போது பொது மக்களுக்கு ஊடகங்கள் மிகப்பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்கள் நலத்தினை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் அதற்கான பொறுப்பு உண்டு என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இனவாதம் , மதவாதம் , சாதிபேதம் உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் குரோதமான சொற்களைத் தேர்தல் காலத்தில் பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தற்பொழுது ஊர்வலம் செல்ல முடியாது. தேர்தலின் போது இலங்கையில் ஊர்வலம் செல்வதற்கு தடை. இதனைத் திருத்தவேண்டுமாயின் இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குங்கள் நாட்டின் பிரஜைக்கு கட்சி சார்பாக செயற்படவேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
ஊடகக் கருத்து கணிப்பு தொடர்பான செய்திகள் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை வெளியிடுவதாயின் காலம் , யார் இதனை மேற்கொண்டார்கள், பெயர் விபரங்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்தி வெளியிடுவது முக்கியமானதாகும்.
அரச சொத்துக்களை பயன்படுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது தவறானதாகும். சிலர் நிதியுதவி வழங்குவார்களாயின் அது இலஞ்சத்திற்கு உட்பட்ட குற்றமாகும்.தேர்தல் காலங்களில் பொருட்களை வழங்குவது இலஞ்ச குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் சட்டம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என்றார்.வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினை நாம் எதிர்பார்த்துள்ளோம்.
வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பிற்கு நாம் தொண்டர்கள் இருவரை வழங்குமாறு வேட்பாளர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
தேர்தல் பாதுகாப்புடன் இடம்பெறுவது மக்களின் பொறுப்பாகும்.வாக்களிப்பதற்கு அடையாளஅட்டை முக்கியமானதாகும். தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத எவருக்கும் தேர்தல் மத்திய நிலையங்களில் பிரவேசிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.
அரசியல் நிகழ்ச்சிகளின் போது பக்கச்சார்பற்ற வகையிலும் நடுநிலையாகவும் செயற்படவேண்டும் .காற்று நீர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைப்போன்று வானொலி போட்டுத்தன்மையும் பொதுமக்களுக்கு உரித்தான ஒன்றாகும்.இதனை முறைகேடாகப் பயன்படுத்துவது ஓடும் நீரில் இயற்கை கழிவை சேர்ப்பதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஊடகங்கள் தேர்தல் தொடர்பிலான பெறுபேறுகளில் சுயமான கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
பொருட்களை வழங்குவது மூலம் தேர்தலுக்கு வாக்களிக்கக் கட்டாயப்படுத்த கூடாது. அரச நிதியில் பொருட்களை விநியோகித்தல் அல்லது தனியார் நிதியில் பொருட்களை விநியோகித்தல் முதலானவற்றை வேட்பாளர் மேற்கொள்வாராயின் இது முழுமையாகத் தவறான விடயமாகும். தேர்தல் காலத்தில் பொருட்களை விநியோகிப்பது தவறானதாகும் . இது வாக்குகளை இலக்குகளைக் கொண்டு முன்னெடுப்பது தவறான நடவடிக்கையாகும்.
போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் வேட்பாளருக்கு சிவில் பிரஜைக்கு மற்றும் ஊடகங்களுக்கு நாட்டின் சுதந்திரம் மற்றும் நீதியான பொறுப்பு உண்டு. 2009 ஆம் ஆண்டில் ஊடகங்களுக்கு இது தொடர்பில் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சட்டத்தினால் நிர்வகிக்காது சுயேட்சையாக நிருவகிக்கப்படுவது முக்கியமானதாகும்.பொதுமக்கள் தொடர்பில் வேட்பாளர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும். சுயேட்சை குழுக்களுக்கும் ஊடகங்களில் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று தெரிவித்த அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடும் அவர் சுயேட்சை வேட்பாளர் குழுக்களை கொழும்புக்கு அழைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். 
தகவல் திணைக்களம் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...