ஊடகவியலாளர் மீது தாக்குதல்;காப்பாற்ற முயற்சித்த முஸ்லிம் நபர்கள் மீதும் தாக்குதல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

ஊடகவியலாளர் மீது தாக்குதல்;காப்பாற்ற முயற்சித்த முஸ்லிம் நபர்கள் மீதும் தாக்குதல்

Share This


சாவகச்சேரியில் ஊடகவியலாளர் மீது ஆட்டோவில் வந்த இரு மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவையான யாழ்.எப்.எம் இல் கடமையாற்றும் ஊடகவியளாளர் மீது நேற்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாவகச்சேரியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே மர்மநபர்கள் வாகனத்தை மறித்து தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் இடம்பெற்றது. தாக்கியவர்கள் CP _QE 4876 பச்சை கலர் ஆட்டோவில் வந்தே  காட்டுத்தனமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தின் போது அங்கிருந்த பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு வெளியே வந்த இரண்டு முஸ்லிம் நபர்கள்  ஊடகவியாளரை பாதுகாக்க முற்பட்ட போது அவர்கள் மீதும் ஆட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் பியர் மதுபோத்தலால் தாக்கியுள்ளனர்.

ஆட்டோவில் வந்த நபர்கள் அரசியல் ஆதிக்கம் உள்ள நபர் ஒருவரின் பெயரை அத்தருணத்தில் பயன் படுத்தியிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஆட்டோவில் தப்பிச் சென்றதாகவும், சம்பவத்தினைக் கண்ட பொது மக்கள் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE