கிந்தோட்டை விவகாரம் ; முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த சாகல ரத்நாயக்ககிந்தோட்டை விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமாரதிஸாநாயக்க எழுப்பிய வினாவுக்கு சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கஅளித்துள்ள பதிலானது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைபோன்றதாகும்.

நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்ககிந்தோட்டை விவகாரம் தொடர்பில் கடுந் தொணியில் கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு பதில் வழங்கிய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க,அங்கு பொலிஸாரும் முப்படையினரும் பொறுப்புடன் செயற்பட்டதாகவும் எந்தசந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு மீளப்பெறப்படவில்லை என கூறியிருந்தார்.

கிந்தோட்டையில் முஸ்லிம்கள் மீதான இனவாதிகளின் தாக்குதல்களுக்குபாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியதையும் அவர்களே முன்னின்றுசெய்ததையும் அந்த பகுதி மக்கள் கண்ணுற்றதாக சாட்சியம் கூறுகின்றனர்.பொலிஸ் மா அதிபர் கூட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை நிலைநாட்டதவறிவிட்டதாக ஏற்றுக்கொண்டுள்ளார்அரசுக்கு சார்பான முஜீபுர் ரஹ்மான்மற்றும் அஸாத்சாலி போன்றவர்கள் கூட கிந்தோட்டையில் பாதுகாப்புமீளபெறப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளனர்இவ்வாறான நிலையில் சட்டம்மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலுள்ளவாறுபதிலளித்துள்ளதானது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும்செயற்பாடாகும்.

இப்படி நாகூசால் பொய் சொல்வது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஒன்றும்புதிதல்லசில மாதங்கள் முன்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளுத்கமைக்கு நீதிநிலை நாட்டப்பட்டுவிட்டதாக கூறி பலத்த கண்டனத்தை பெற்றிருந்தார்ஒருவர்தங்களது பிழைகளை ஏற்றுக்கொண்டால்அடுத்த முறை இவ்வாறானசம்பவங்கள் இடம்பெறும் போது அதனை தடுக்க முயல்வார்அவ்வாறில்லாதுபொய்களை கொண்டு பூசி மெழுகுபவர்கள்இதன் பின்னர் ஏதாவது சம்பவங்கள்இடம்பெறும் போது வேடிக்கை தான் பார்ப்பார்கள்இவர்கள் தொடர்பில்முஸ்லிம்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

 அஹமட் 
ஊடக செயலாளர் 
முஸ்லிம் முற்போக்கு முன்னனி ..