பெண் வேட்பாளர்களுக்கு கிராக்கி: பட்டியல்களைத் தயார்படுத்தும் கட்சிகள் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

பெண் வேட்பாளர்களுக்கு கிராக்கி: பட்டியல்களைத் தயார்படுத்தும் கட்சிகள்

Share Thisஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், இத் தேர்தலில் போட்டியிடும்  பிரதான அரசியல் கட்சிகள் மற்றும்  சுயேட்சைக் குழுக்கள் என்பன, கம்பஹா மாவட்டத்தில்  பெண் வேட்பாளர்களைத் தேடி அலைய ஆரம்பித்துள்ளதாக தகவல்கள்  கசிந்துள்ளன.

   புதிய உள்ளூராட்சித் தேர்தல் சட்டங்களின் பிரகாரம், உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பட்டியல்களில் 25 வீதம் பெண் வேட்பாளர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று,  தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே கம்பஹா மாவட்ட  அரசியல் கட்சிகள் தற்போது பொருத்தமான பெண் வேட்பாளர்களைத் தேடத் தொடங்கியுள்ளன.

   இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பும், ஆர்வமும் குறைவாக உள்ள நிலையில், பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக, கம்பஹா மாவட்ட பிரதான அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் போட்டிகள் நிலவி வருவதாகவும் தெரியவருகிறது. மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, மீரிகம மற்றும் நீர்கொழும்பு போன்ற தொகுதிகளில், பெண் வேட்பாளர்களுக்கு கிராக்கி  ஏற்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களது பட்டியல்களைத் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும், கம்பஹா மாவட்ட பிரதான கட்சிகளின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

( ஐ. ஏ. காதிர் கான் )

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE