ஆலயடிவேம்பு DS இன ஒற்றுமையை கட்டியெழுப்பவும் - PMNM பகிரங்க கடிதம்!ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியது   தொடர்பில் தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அம்பாறையில் தமிழ்-முஸ்லிம் உறவுகள் மிகவும் நன்றாக உள்ளது, இதனை அதிகாரிகள், அரசியல்வாதிகள் குழப்பவுதை இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இயக்கம் குறிப்பிட்டுள்ளது, பேஸ்புக்கில் இயக்கம் பதிவிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இன ஒற்றுமை என்பது விட்டுக்கொடுப்பில் ஆரம்பிக்கிறது, அரசியல்வாதிகள் ஏதும் அரசியல் ரீதியான பதிவுகள் அறி்க்கைகள் இடுகிற போது அதனை பூதாகரமாக்கி அதன் மூலம் நீங்கள் செய்யும் அரசியலை செய்வது ஏற்புடயது அல்லது, நேரடியாக நீங்கள் அவருடன் பேசமுடியும் அதற்காக ஆர்ப்பட்டம் செய்து இன முறுகல் போல செயற்படுவது அதிகாரிகளுக்கு ஏற்புடயது அல்ல.

முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர் அப்படி நடந்துகொண்ட வரலாறும் இல்லை, அக்கரைப்பற்றை அண்டிய பிரதேசங்களில் தமிழ் - முஸ்லிம் உறவு பாரம்பரிய வரலாறு கொண்டது சில்லறைத்தனமான அரசியல்வாதிகளை போல செயற்படாமல் இன ஒற்றுமை வளர்க்கும் அதிகாரி போல செயற்பட வாழ்த்துக்கள்.