மீண்டும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயராக அதாஉல்லா சக்கி #HotNewsஅக்கரைப்பற்று மாநகர சபை மேயர் பதவிக்கு பலத்த போட்டி நிலவும் இத்தருவாயில் தேசிய காங்கிரஸ் தலைவர் எனக்குதான் தருவார், தனக்கு தான் தருவார் முண்டியடிக்கும் சந்தர்ப்பத்தில் யாருக்குமே இல்லாமல் மீண்டும் தலைவரின் மகன் சக்கிக்கே வழங்கப்படவுள்ளது.

பதவியை விசுவாசமுள்ள ஒருவருக்கு வழங்க வேண்டும் அது மாத்திரமின்றி தனக்கு அதிகாரமின்றியுள்ள நிலையில் பதவி வேறு ஒருவருக்கு போனால் நிலமை தலைகீழாகிவிடும் என்ற அச்சம் தலைவருக்கு எழுந்துள்ளது.

எது எவ்வாறாயினும் மீள பதிவியை சக்கிக்கு வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை, ஆனால் அக்கரைப்பற்று மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? பதவியை நம்பியிருக்கும் கட்சி முக்கியஸ்தர்கள்தான் ஏற்றுக்கொள்வார்களா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.