Dec 21, 2017

JVP க்கு முஸ்லிம்கள், வாக்களிக்கலாமா..?


JVP இன் 1971 புரட்சியும், இன்றைய அரசியலும்

1971 ஏப்ரல் 2 ம் திகதி JVP இன் மூத்த உறுப்பினர்கள் 9 பேர் வித்யோதய பலகலைக்கழக சங்காராமய பன்சலவில் கூடி தீரமானிக்கினறனர் நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் ஏப்ரல் 5 ம் திகதி தாக்கி அரசைக் கைப்பற்ற வேண்டும் என்று.அதுதான் JVP இன் தோலவியுற்ற  முதலாவது புரட்சியின் ஆரம்பம்.

அந்த நாட்களில் அவர்களை " சே குவேரா"காரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டிருந்த தலைவர் ரோஹன விஜேவீர தனது சகா லால் மூலம் அனுப்பிய கட்டளைப்படியே தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டது.தாக்குதலுடன் தனது விடுதலைக்காக நாடெங்கிலும் போஸ்டர்கள் ஒட்டி துண்டுப்பிரசுரங்களையும் விநியோகிக்குமாறும் அவர் கட்டளையிட்டார்.

JVP தலைவர் அன்று சே குவேராவின் கொள்கையின்பால் கவரப்பட்டவராக இருந்ததால் அவரின் உடை, நடை எல்லாம் சே வை ஒத்திருந்தது. சே குவேரா என்பவர் ஆஜன்டினாவில் பிறந்து பின்னர் கியுபாவில் கஸ்ரோவுடன் இணைந்து கியூபப் புரட்சிக்கு வித்திட்டவர்.மாக்சிசம்,சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்ற கொள்கையை கொண்டவர். ஆயுதப் புரட்சி மூலம் கியூபாவை கம்யூனிசத்துக்கு மாற்றிய போராளிகளில் ஒருவர்.

அகிம்சை முறையில் தன்னை விடுவிக்க முடியாவிடின் நாடளாவிய ரீதியில் ஸ்திரமற்ற நிலமையைத் தோற்றுவித்து தன்னை விடுவிப்பதற்காக 500 போராளிகளை யாழிற்கு அனுப்புமாறு விஜேவீர கட்டளை பிறப்பித்தார.அதன் படி 05.04.1971 அன்று நாடெங்கிலுமுள்ள பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. 35 பொலிஸ் நிலையங்களையும் 50 இற்கு மேற்பட்ட நகரங்களையும் JVP தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.மேலும் 50 இற்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்களை கட்டாயம் மூட வேண்டிய நிலைக்கு,அரசு தள்ளப்பட்டது.அரசு இவ்வாறான புரட்சி யொன்றை எதிர் கொள்ள எந்த வித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்ததால் பல நாட்கள் இப்பிரதேசங்கள் JVP இன் கட்டுப்பாட்டிலேயே இருந்தன

முதன் முறையாக இலங்கை அரசுக்கு சிவிலியன்களின் ஆயுதப் புரட்சியை எதி்ர் கொள்ள நேர்ந்தது.அரசு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி முப்படையினரின் ஆதரவுடன் புரட்சியை முறியடித்து மீண்டும் எல்லாப்பிரதேசங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.57 படையினரும் 37 பொலிஸாரும் இறந்து 323 படையினரும் 193 பொலிசாரும் காயமடைந்ததாக உத்தியோக பூர்வ செய்திகள் கூறினாலும்JVP அடங்கலாக ஏறத்தாழ 10000 பேர் வரை இறந்திருக்கலாமென நம்பப்படுகின்றது.

அமைதியாக இருந்த நாட்டில் சிவில் யுத்தத்தை முதன் முதல் கொண்டு வந்தது JVP யினரே. அன்று புரட்சியை கட்டுப்படுத்த அரசு பல வியூகங்களையும் வகுத்தது.5000 மேற்பட்டவர்களை சிறையில் அடைத்திருந்தது.தாக்குதலை ஆரம்பிக்க விஜேவீர தந்தி மூலம் கட்டளை பிறப்பித்தார்.அத்தந்தியில் அதனை சொல்லியிருந்த விதம் வித்தியாசமானது.சுவையானது.'JVP Appuhamy expired.funeral on 5' "ஜே.வீ. பீ அப்புஹாமி இறந்து விட்டார். இறுதிக்கிரியை   5 இல்" இப்படித்தான் அன்று தாக்குதலை ஆரம்பிக்குமாறு கட்டளையை தந்தி மூலம் அறிவித்தது.

ஆனால் இரவில் ஆரம்பிக்க வேண்டிய தாக்குதலை மொனராகல வெள்ளவாய பிரதேசத்தில் இருந்த தாக்குதல்தாரிகள் தவறாக புரிந்து கொண்டு காலையிலே பொலிஸ் நிலையத்தை தாக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக ஏனைய பிரதேசத்தில் இருந்த பொலிசார் சற்று விழிப்படைந்தாலும் இவ்வாறான ஒரு தாக்குதல் தமது பிரதேசத்தில் நடத்துமளவுக்கு JVP பலமானது என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.பல பிரதேசங்களை தம்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் தொடர்ந்து அப்பிரதேசங்களை பாதுகாப்பது எவ்வாறு என்பதை அவர்கள் புரிந்திருக்கவில்லை.பனாகொடை இராணுவ முகாமைத் தாக்குதல்,பிரதமர் ,அமைச்சர்கள் அரச உயர் அதிகாரிகளை பணயமாகப் பிடித்தல்,கொழும்பை கைப்பற்றல் ,விஜேவீரவை விடுவித்தல் ஆகிய நான்கு பிரதான திட்டங்களை இப்புரட்சி கொண்டிருந்தாலும் எதுவும் சாத்தியப்படவில்லை.அன்றைய பிரதமர் சிறிமாவோ அம்மையார்   இந்திய, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியுடன் புரட்சியை முறியடித்தார்.கிராமிய பிரதேசங்கள் புறக்கணிப்பு,வேலைவாய்ப்பின்மை,வறுமை போன்ற காரணங்கள் 1971 புரட்சிக்கு காரணங்களாக கூறப்படுகின்றது.

சே குவேரா கியுபாவில்"நடத்தியது போன்றே இலங்கையிலும் JVP  மேற்கொண்டனர்.இது இக்கடசியின் முதலாவது தோல்வியில் முடிந்த ஆயுதப் புரட்சி.அதன் இரண்டாவது ஆயுதப் புரட்சி 1987−89 காலப் பகுதியில் நடைபெற்றது.இக்காலப்பகுதியில் நடைபெற்ற  மயிர்க்கூச்செரியும் சம்வபவங்கள் பயங்கரமானவை.அது பற்றி பலருக்கு இன்னும் ஞாபகமிருக்கலாம்.அதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம்.

இவ்வாறு தனது கொள்கையை அமுல்படுத்த இரண்டு முறை ஆயுதமேந்திய ஒரு கட்சியின் சரித்திரம்,கொள்கைகளை சரியாகப் புரிந்து கொண்டுதானா இன்று இக்கட்சியில் முஸ்லிம்களும் பரவலாக போட்டியிடுகின்றனர்? கம்யூனிச அல்லது சோசலிச கொள்கையை  அல்லது சமவுடமை கொள்கையை கொண்ட  JVP க்கு ஆதரவளிக்கலாமா? இன்று சீனா,கியூபா போன்ற நாடுகளில் இஸ்லாம் முழுமையாக நசுக்கப்பட்டு ஆட்சி செய்யும் போது மாற்றம் ஒன்று தேவை என்ற போலி மாய கோஷத்தை வைத்து JVP வாக்குக் கேட்பதில் இருக்கும் நியாயம் தான் என்ன?சிந்திப்போம்.

சட்டத்தரணி பஸ்லின் வாஹிட்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post