றஹ்மத் மன்சூர் படுதோல்வியடைவார்; வேட்பாளர் றிசாட் பாரூக் முழக்கம்! #kalmunaiமேயராகும் கனவில் களமிறங்கியுள்ள றஹ்மத் மன்சூர் எனது வட்டாரத்தில் போட்டியிடுவது எனக்கு ஒரு பொருட்டே இல்லை, இவர் படுதோல்வியடைவது உறுதியாகிவிட்டது, என்றுமில்லாதவாறு இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் கல்முனையில் மண்கவ்வும் என றஹ்மத் மன்சூரின் வட்டாரத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் றிசாட் பாரூக் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துரைத்த அவர்,

அதிகப்படியான எனது குடும்ப வாக்குகளை கொண்ட எனது வட்டாரம், சின்னங்களையோ அல்லது கட்சிகளையோ பார்க்காது, பாரூக்கின் புதல்வரான எனக்கு ஒருமித்து வாக்களிக்க அனைவரும் தயாராகிவிட்டனர். இன்சா அல்லாஹ், றஹ்மதுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் பாடம் கற்பிக்கும் தேர்தலே இது என்றார்.