Jan 31, 2018

ஓட்டமாவடி 03ஆம் வட்டாரத்தின் உறுதிப்படுத்தப்பட்ட வெற்றி நாயகன் அஹமட்டுக்கு கொடுக்கப்படும் சவால்கள் எதற்காக.?

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தின் உறுதிப்படுத்தப்பட்ட வெற்றி நாயகன் அஹமட்டுக்கு கொடுக்கப்படும் சவால்கள் எதற்காக.?

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியானது ஓட்டமாவடி பிரதேச வட்டாரத்தில் ஒரு ஆசனத்தினை வெற்றி கொள்கின்றது என்றால்? அது மூன்றாம் வட்டாரத்தில் போட்டிடுகின்ற யூ.எல்.அஹமட் என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற முறை தேர்தலில் மூன்றாம் வட்டரத்தில் முக்கிய கழகமாக செயற்பட்டு வரும் ரேன்ஜேர்ஸ் விளையாட்டு கழகம் முகாஜீரின் மாஸ்டரை முன்னை நிலைப்படுத்தி பிரதி அமைச்சர் அமீர் அலீயுடன் கூட்டு சேர்ந்து வெற்றியீட்டி இருந்தமை எல்லோருடம் அறிந்த விடயமாக உள்ளது.

அதே போன்று இம்முறையும் மூன்றாம் வட்டரத்தில் ஆதிக்கத்தினை செலுத்தும் குறித்த கழகமானது எல்லோராலும் குறித்த பிரதேசத்தில் மதிகப்படுபவரும், சகஜமாக எல்லா தரப்பினருடனும் பழக கூடிய நற்குன உள்ள யூ.எல்.அஹமட் எனும் ஒருவரை சுதந்திர கட்சியில் களமிறக்கி அவருடைய வெற்றியினையும் எதுவிதமான போட்டிகளும் இல்லாமல் உறுதி செய்துள்ளது.

இது அஹமட்டுக்கு மூன்றாம் வட்டார மக்கள் கொடுக்கின்ற ஒரு மரியாதையாகவும், அவர் பிறந்து வளர்ந்த காலம் தொடக்கம் குறித்த பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட நற்பெயருக்கு கிடைத்துள்ள வெற்றியாகவே நான் பார்க்கின்றேன். இவ்வாறான நற்குனங்களை கொண்டுள்ள அஹமட் இஸ்லாமிய மார்க்க ரீதியாக பாவங்கள், பிழைகள் என்று வருகின்ற பொழுது அல்லாஹ்விற்கு பயந்து நடக்கின்ற மனிதனாகவும் பிழைகளை செய்கின்ற மக்கள் மத்தியில் நன்மைக்கு மாறான விடயக்களை என எடுத்து கூறுகின்ற மனிதனாக அஹமட்டை எனது வாழ்க்கையில் பல தடவைகள நான் பார்த்திருக்கின்றேன்.

 என்னுடனும் அன்பாகவும், மிகவும் நெருங்கிய நண்பனாகவும் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக பழகும் அஹமட் குறித்த வட்டாரத்தில் வெற்றி அடைய எனது பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் அவருக்கு என்றும் உண்டு.

அந்த வகையில் மூன்றாம் வட்டாரத்தின் வெற்றி நாயகனாக சுதந்திர கட்சியில் வளம் வந்து கொண்டிருக்கும் அஹமட்டினுடைய வீறு நடையினை பொறுக்காதவர்கள் மூன்றாம் வட்டாரத்தில் காணப்படுகின்ற அவருடைய போஸ்டர்களை கிழிப்பதாலும், ஒயில் அடிப்பதாலும், மக்களின் மனதில் இருந்து அவருடைய பெயரினை அழித்து விடலாம் என  நினைத்து கொண்டு தங்களுடைய அரசியலினை முன்னெடுக்கின்றனர்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்கள் என்றால்.! தங்களது கருத்துக்களை சொல்லி வாக்கு கேட்பதே எதிரான அரசியலினை மேற்கொள்ளும் நண்பர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பாகும். அதை விடுத்து இப்படி கோழைத்தனமான செயல்களில் இறங்கி போஸ்டர்களை கிழிப்பதாலும் ஒயில் அடிப்பதாலும்,  அஹமட்டினுடைய போஸ்டர்களுக்கு மேல் தங்களுடைய போஸ்டர்களை ஒட்டுவதாலும் அஹமட் பயந்து விட்டான் என்றோ.? அல்லது தாங்கள் வெற்றி பெற்று விடலாம் என்றோ நினைப்பது அரசியல் நாகரீகம் தெரியாத செயலாக இருப்பதோடு தோல்வியினை தாங்கிகொள்ளத மனங்களின் வெளிப்பாடாகவும் இருக்கின்றது.

சூழ்ச்சியாளனுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ்.  அது மட்டுமல்லாமல் பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். இன்ஸா அல்லாஹ் அஹமட் வெற்றி பெற்று விட்டார்.

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post