இவ்வருட ஹஐ் முகவர்கள் நியமனத்திற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் பெ்ரவரி மாதம் 05ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளதாக அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

இவ்வருட் ஹஜ் முகவர் நியமனம் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 140 முகவர் நிலையங்கள் விண்ணப்பித்துள்ளன. இவற்றில் அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள  ஹஜ் முகவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

ஆகக் குறைந்தது 4 உம்ராக்களுக்கு பயணிகளை அழைத்த சென்றிருப்பது அடிப்படைத் தகைமையாகும். சுயாதீன குழுவொன்று நேர்முகப்பரீட்சையை நடாத்தவுள்ளது. குழுவின் தலைவராக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வை.எல்.எம்.நவவி நியமிக்கப்பட்டுள்ளார்.

நேர்முகப்பரீட்சையில் ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் இவ்வருடம் இலங்கைக்கு கிடைக்கவுள்ள 3000 கோட்டாக்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

ஹஜ் முறைப்பாடுகளின் விசாரணைகளையடுத்து குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட முகவர்களுக்கு நியமனம் வழங்கப்படமாட்டாதென அரச ஹஜ் குழுவின் தலைவர் தெரிவித்தார்.  

Share The News

Post A Comment: